இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

கும்ப ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 16-ந் தேதி செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி திதி, காலை(7.13)க்கு மேல் பஞ்சமி திதி.

நட்சத்திரம்: உத்திரம் நட்சத்திரம், இரவு (8.22)க்கு மேல் அஸ்தம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம், இரவு (8.22)க்கு மேல் சித்தயோகம்,

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

திருச்செந்தூர் முருகன் கோவில் மூலவர் பிரதிஷ்டை தினம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். மாரியம்மனை வழிபட மன அமைதி உண்டாகும்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: முயற்சிகள் கைகூடும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். உறவினர்களால் சிறுவிரயம் உண்டு.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

மிதுனம்: யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்: விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும். வரவு திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

சிம்மம்: சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றத்தாரின் வருகை உண்டு, மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி: தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள்

துலாம்: அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

விருச்சிகம்: வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.

தனுசு: உற்சாகம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் மனக்கசப்பு மாறும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விவாக பேச்சுகள் முடிவாகி மன நிம்மதியை கொடுக்கும்,எதிர்பாராத பணவரவு உண்டு.

மகரம்: நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல்களும் அதிக செலவும் ஏற்படலாம்.

கும்பம்: வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வீண்பழிகள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மீனம்: மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வராமல் முடங்கியிருந்த பாக்கிகள் வந்து மகிழ்விக்கும். உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: கும்பம்.


Next Story