இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 5 Feb 2024 12:11 AM GMT (Updated: 5 Feb 2024 12:14 AM GMT)

மேஷ ராசிக்காரர்கள் மனதில் இனம் புரியாத கவலைகள் உருவாகும்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 22-ந் தேதி திங்கட்கிழமை.

திதி: தசமி திதி பகல்(12.41)க்கு மேல் ஏகாதசி திதி.

நட்சத்திரம்: கேட்டை நட்சத்திரம் இரவு (3.35)க்கு மேல் மூலம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

திருவள்ளூர் வீரராகவர் ஹம்ச வாகனம், சூரிய பிரபையில் பவனி. திருமயம் ஆண்டாள் பிரியாவிடை உற்சவம் மற்றும் என்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் மலர்ப்பாவாடை தரிசனம். மாரியம்மனை வழிபட மன அமைதி உண்டாகும்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் உருவாகும். குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகண்டு பிடிக்கலாம்.

ரிஷபம்: யோகமான நாள். கடிதங்கள் நல்ல செய்தியை கொண்டுவந்து சேர்க்கும். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் கூடும்.

மிதுனம்: தொட்டது துலங்கும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். தள்ளிப்போட்ட காரியம் ஒன்று இன்று தானாக நடைபெறும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கடகம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்: குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும். தொழில் சீராக நடைபெறும்.

கன்னி: தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

துலாம்: முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப்பாதை புலப்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

விருச்சிகம்: பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள், பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.பொதுநலத்தில் ஆர்வம் காட்டு வீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் திட்டங்கள் வெற்றி பெறும். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும்.

தனுசு: யோகமான நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அன்னிய தேசப்பயணங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

மகரம்: சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள், உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கும்பம்: துன்பங்கள் தூளாகும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

மீனம்: விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் உண்டு. உள்ளன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

சந்திராஷ்டமம்: இரவு 3.36 வரை மேஷம்; பிறகு ரிஷபம்.


Next Story