இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகாலையிலேயே விரயம் உண்டு. அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 24-ந் தேதி புதன்கிழமை.

திதி: துவாதசி திதி காலை(10.43)க்கு மேல் திரயோதசி திதி.

நட்சத்திரம்: பூராடம் நட்சத்திரம் இரவு(2.21) க்கு மேல் உத்ராடம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம்,

ராகுகாலம்: மதியம் : 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

பிரதோஷம்.நலங்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் விஸ்வரூப தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவள்ளூர் வீரராகவர் சேஷ வாகனத்தில் பவனி. திருமயம் ஸ்ரீஆண்டாள் திருவீதி உலா. திருவாவடுதுறை, சூரியநயினார் கோவில், கல்லிடைக்குறிச்சி, திருமொச்சியூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் நந்தி வாகனத்தில் புறப்பாடு.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: சிகரம் போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகைகைகளில் புரளும், ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

ரிஷபம்: அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள், அலைச்சல் கூடும். அதிகாலையிலேயே விரயம் உண்டு. எந்த காரியத்தையும், எடுத்தோம். முடித்தோம் என செய்ய இயலாது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்: மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் திருப்தி தரும்.

கடகம்: ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்து கொடுக்கும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வுகாண பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு.

சிம்மம்: சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்டநாட்களாக வசூலாகாத பணம் இன்று வீடு தேடி வரும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

கன்னி: யோகமான நாள். நேற்று ஏற்பட்ட காரியத்தடை இன்று அகலும். எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டு கொள்வீர்கள். பண வரவு திருப்திதரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை உயரும். அன்னிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்

விருச்சிகம்: நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள், மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள்.

தனுசு: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். நேசித்த ஒருவரோடு நீண்டதூர பிரயாணம் செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

மகரம்: நினைத்த காரியம் நிறைவேறும் நாள். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள், வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். வளர்ச்சிக்கு புதிதாக அறிமுகமானவர்கள் உதவி செய்வார்கள்.

கும்பம்: தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடை பெறும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோகத் தடை அகலும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

மீனம்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். பயணங்கள் பலன் தரும்.

சந்திராஷ்டமம்: ரிஷபம்.


Next Story