இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மிதுன ராசிக்காரர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை,

திதி: சதுர்த்தசி திதி (காலை 7.16)க்கு மேல் அமாவாசை திதி.

நட்சத்திரம்: திருவோணம் நட்சத்திரம் இரவு (11.50)க்கு மேல் அவிட்டம் நட்சத்திரம்.

யோகம்: மரணயோகம் (11.50)க்கு மேல் சித்தயோகம். மேல்நோக்குநாள்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

தை அமாவாசை. முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் விழா கொடியேற்றம். திருவள்ளூர் வீரராகவர் சூர்ணாபிஷேகம். மதுரை மீனாட்சி அம்மன் வைரக்கிரீட தரிசனம். திருநெல்வேலி, தென்காசி, சங்கரநயினார் கோவில் ஆகிய தலங்களில் லட்ச தீப காட்சி.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள், தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திலிருந்து மாறுதல் கிடைக்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்: ஆலய வழிபாட்டால் அமைதி கிட்டும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

மிதுனம்: நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம்.

கடகம்: மனக்குழப்பம் அகலும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

சிம்மம்: அன்னதானத்தின் அரியபலன் கிடைக்கும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

கன்னி: நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில் வளர்ச்சியுண்டு.

துலாம்: நட்பால் நன்மை ஏற்படும் நாள். பணவரவு திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள் அஞ்சல் வழித்தகவல் அனுகூலம் தரும்.

விருச்சிகம்: இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எதிர்பார்த்த வருமானம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

தனுசு: வளர்ச்சி கூடவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வுகள் தேடிவரும்.

மகரம்: நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

கும்பம்: விழிப்புணர்ச்சியுடன் செயல் பட வேண்டிய நாள். இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

மீனம்: லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.

சந்திராஷ்டமம்: மிதுனம்.


Next Story