‘பழைய கிணறு தூர்வாரும் போது கவனம் வேண்டும்..’
நகர்ப்புறங்களில் ஆங்காங்கே உள்ள பழைய வீடுகளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்ற காரணத்துக்காக அங்குள்ள கிணறுகள் தூர்வாரப்பட்டு பயன்படுத்துவது வழக்கம்.
நகர்ப்புறங்களில் ஆங்காங்கே உள்ள பழைய வீடுகளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்ற காரணத்துக்காக அங்குள்ள கிணறுகள் தூர்வாரப்பட்டு பயன்படுத்துவது வழக்கம். தூர்வாருவதற்கென்று ஆட்களை நியமித்து வேலையை செய்து முடிக்கப்படும். அத்தகைய சூழ்நிலைகளில், பழைய கிணறுகளின் ஆழங்களில் விஷ வாயுக்கள் உற்பத்தியாகி பரவி இருப்பதை, சாதாரணமாக கண்டுபிடிப்பது முடியாத காரியம். சில சமயங்களில் பணியாட்கள் கிணறு அல்லது மற்ற ஆழமான குழிகளில் இறங்கி தூர்வாரும்போது விஷ வாயுவால் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் அதனால் உயிரிழக்கும் அசம்பாவிதங்களும் நடந்துவிடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகாமல் தடுக்கும் முறை பற்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கும் நிபுணர் கூறிய தகவல்களை இங்கே காணலாம். அவை மனித உயிரை காப்பாற்றும் முக்கிய குறிப்புகளாக எடுத்துக்கொள்வது அவசியமானது.
1. தூர்வாருவதற்காக தேர்வு செய்யப்பட்ட கிணற்றுக்குள் முதலில் ஆட்கள் இறங்குவது கூடாது. அதற்கு பதிலாக ஒரு காகிதத்தை நெருப்பில் பற்ற வைத்து அதை கிணற்றுக்குள் போட வேண்டும். அந்த காகிதம் எரிந்தபடியே அணையாமல் கிணற்றின் அடி ஆழம் வரையில் சென்று கீழே விழுந்தால், அந்த கிணற்றில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய வாயுக்கள் இல்லையென்று கருதலாம்.
2. இரண்டாவது முறை சற்றே வித்தியாசமானது. அதாவது தூர் வார முடிவு செய்த கிணற்றுக்குள் உயிருள்ள ஒரு சின்ன கோழியை கயிற்றில் பிணைத்து அடிப்பகுதி வரையில் இறக்க வேண்டும். கோழியானது கிணற்றின் அடிப்பகுதி வரையிலும் செல்லுமாறு கயிற்றை விட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு மேலே இழுக்கவேண்டும். அந்த நிலையில் கோழியின் உயிருக்கு ஆபத்து இல்லாத பட்சத்தில் கிணற்றில் அபாயகரமான வாயுக்கள் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

Related Tags :
Next Story