வீட்டு மனையை கவனிப்பது அவசியம்..!


வீட்டு மனையை கவனிப்பது அவசியம்..!
x
தினத்தந்தி 29 April 2017 1:45 AM IST (Updated: 28 April 2017 7:15 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட சதவிகித மக்கள் தங்களது சேமிப்புகளை முதலீட்டு அடிப்படையில் வீட்டு மனைகளாக வாங்குகிறார்கள் என்று முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பிட்ட சதவிகித மக்கள் தங்களது சேமிப்புகளை முதலீட்டு அடிப்படையில் வீட்டு மனைகளாக வாங்குகிறார்கள் என்று முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுவாக, வாங்கப்பட்ட வீட்டு மனைகள் ஒருவர் குடியிருக்கும் வீட்டுக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில் அவ்வப்போது சென்று பார்க்க எல்லோராலும் முடிவதில்லை. வாங்கிய வீட்டு மனையை பல நாட்களாக பார்க்காமல் விட்டுவிடும் பட்சத்தில், மனைக்கு அருகாமையில் வேறொருவரது வீடுகள் அமையும்போது, நமது மனையின் எல்லைக்குள் அதன் கட்டிட அமைப்புகள் எதிர்பாராவிதமாக அமைந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது பிறருடைய பாதுகாப்பு வேலிகள் நமது இடத்தில் அமையும் சிக்கல்கள் ஏற்பட்டு விடலாம். அதனால் நமது மனையை அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்வதோடு, சுற்றுப்புறங்களில் நடக்கும் கட்டிட வேலைகளையும் கவனிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை மனையை நேரில் சென்று பார்ப்பது நல்லது.. அருகில் இருக்கும் வீடுகள், பிற தொழில் நிறுவனங்கள் அல்லது கம்பெனிகள் மனைக்கு பக்கத்தில் இருந்தால், அவர்கள் தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ளலாம். அதன்மூலம் மனையின் நிலை பற்றி அவ்வப்போது விசாரித்து தெரிந்து கொள்ள இயலும். 

Next Story