கதவுகள் வடிவமைப்பில் நவீன தொழில் நுட்பம்


கதவுகள்  வடிவமைப்பில்  நவீன  தொழில்  நுட்பம்
x
தினத்தந்தி 6 May 2017 2:00 AM IST (Updated: 5 May 2017 4:09 PM IST)
t-max-icont-min-icon

பாரம்பரியமாக வீடுகளின் தலைவாசல் கதவு உள்ளிட்ட மற்ற அறைகளுக்கான கதவுகளை சில குறிப்பிட்ட மரங்களால் செய்யப்படுவது வழக்கம்.

பாரம்பரியமாக வீடுகளின் தலைவாசல் கதவு உள்ளிட்ட மற்ற அறைகளுக்கான கதவுகளை சில குறிப்பிட்ட மரங்களால் செய்யப்படுவது வழக்கம். கதவுகள் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் முக்கியமான பங்கு வகிக்கிறது. எங்கு அமைப்பது..? எப்படி அமைப்பது..? எத்தனை கதவுகள் அமைப்பது..? என்ற தகவல்களை வாஸ்து சாஸ்திரம் தருகிறது. வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது வீடு அழகாக தோற்றம் அளிப்பதற்கு கதவுகள் முக்கியமான பங்களிப்பை தருகின்றன. வீட்டு வாசல் அழகாக இருப்பதில் கதவுகளுக்கு முக்கிய இடம் உண்டு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் வாசல் கதவுகள் இரும்பு, பைபர் கிளாஸ் என்ற கண்ணாடி இழைகள் மற்றும் ரீ–இன்போர்ஸ்டு பிளாஸ்டிக் ஆகிய பொருட்களில் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. மரங்கள் தவிர இதர பொருட்களால் தயாரிக்கப்படும் கதவுகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பாரம்பரியமான மர கதவுகளின் விலை எப்போதும் பட்ஜெட்டை விட கூடுதலாக மாறிவிடுவது பெரும்பாலானவர்களின் அனுபவமாக உள்ளது. படாக், வேங்கை, தேக்கு, சால், பலா என்று பல வகை மரக்கதவுகள் சந்தையில் கிடைக்கின்றன. வீட்டிலுள்ள அனைத்து கதவுகளுக்கும் உயர் தரமான மரத்தை பயன்படுத்துவதை விடவும் மாற்று மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட கதவு வகைகள் இன்றைய சூழலில் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இருக்கும்.   

பல இடங்களிலும் இப்போது ஸ்டீல் கதவுகள் பயன்பாட்டில் உள்ளன. அழகாக வண்ணம் பூசப்பட்டு, அசல் மரத்தால் செய்யப்பட்டவை போன்று தோற்றமளிக்கும் இவ்வகை கதவுகள் மரத்தை விட பட்ஜெட் குறைவாக இருந்தாலும் வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அலுவலக உபயோகத்துக்கு பயன்படுகின்றன.

இரும்பு கதவுகளுக்கு மாற்றாக பைபர் கிளாஸ் என்ற கண்ணாடி இழை மற்றும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கதவுகளை பயன்படுத்தலாம். கண்ணை கவரும் பலவித வடிவங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை கதவுகள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பதோடு, பல்வேறு பயன்களை கொண்டதாகவும் இருக்
கின்றன.

அசல் மரத்தால் செய்யப்பட்ட கதவுகளை போன்று தோற்றமளிக்கும் இவ்வகை கதவுகளை விதவிதமான வண்ணங்களில் நமது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளுக்கு தேவைப்படும் பராமரிப்பு முறைகள் பைபர் கிளாஸ் கதவுகளுக்கு தேவைப்படுவதில்லை. மழை மற்றும் பனிக்காலங்களில் மர கதவுகளில் பாதிப்புகள் ஏற்படும். பைபர் கிளாஸ் கதவுகளில் அதுபோன்ற பிரச்சினைகள் வருவதில்லை. வாட்டர் புரூப் கொண்டதாக இருப்பதால் ஈரப்பதமான சூழ்நிலைகளை தாங்கி உழைக்கக்கூடியவை.

வீடுகளில் உள்ள குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை, உள்ளிட்ட வெவ்வேறு அறைகளிலும் இந்த கதவுகளை அமைக்கலாம். குறிப்பாக குட்டிப்பசங்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் குழந்தைகள் விரும்பும் வகையில் பல்வேறு டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் இக்கதவுகளை அழகாக வடிவமைக்கலம்.

Next Story