அழகான வீட்டுக்கு எளிமையான உள் அலங்காரம்
அன்றாட பணிகள் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது.
ஆனால், பல நேரங்களில் அத்தகைய சூழ்நிலை இருப்பதில்லை. வீட்டின் உள் அலங்கார அமைப்புகள் மூலம் வீடுகளில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அறைகளின் உள் அமைப்பை கலையும், அழகும் கொண்டதுபோல மாற்றிக்கொண்டால் மனதில் நிம்மதி தாமாக ஏற்படும் என்பது அவர்களது கருத்தாகும்.
எஸ்டிமேஷன்
இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் 'இண்டீரியர் பட்ஜெட்' பற்றி வல்லுனர்களின் கருத்துக்கள் வெவ்வேறு விதங்களில் இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் பல நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் 'எஸ்டிமேஷன்' தருகிறார்கள். 'லேபர் கான்ட்ராக்ட்' முறையில் செய்து தருவதற்கு தனி நபர்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
கார்ப்பெட் ஏரியா
பொதுவாக, வீடுகளின் 'கார்ப்பெட் ஏரியா' அளவுடன் ரூ.1000 என்ற மதிப்பை பெருக்கி வரும் விடை, இண்டீரியர் அமைப்புக்கான தோராயமான செலவாக அமையும். உதாரணமாக, வீட்டின் 'கார்ப்பெட் ஏரியா' 650 சதுர அடியாக இருந்தால், ரூ.6,50,000 என்பதை தோராயமான செலவாக கருதலாம். இதர காரணங்களால் அந்த தொகை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நவீன மூலப்பொருட்கள்
வீட்டின் வெளிப்புற அமைப்பை விடவும் உட்புற அறைகளின் அமைப்புக்கும், அழகுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீடு கட்டும்போது ஏற்பட்ட எதிர்பாராத கட்டுமான குறைகளை 'இன்டிரியர்' பணிகள் மூலம் சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போதுள்ள நவீன தொழில் நுட்ப வசதிகளால் அழகும், வசதிகளும் கொண்டதாக வீட்டின் அமைப்பையே மாற்றிவிடலாம். அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலப்பொருட்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
பட்ஜெட்டுக்கு ஏற்றது
இண்டீரியர் டெகரேஷன் என்ற வீடுகளுக்கான உள் அலங்காரமானது அதிக பட்ஜெட் கொண்ட வீடுகளுக்கானது என்ற கருத்து பலருக்கும் இருப்பதை நிபுணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக குறைவான பட்ஜெட் கொண்ட வீடாக இருந்தாலும் அதற்கேற்ற அலங்கார அமைப்புகளை செய்து அட்டகாசமாக வீட்டை மாற்ற முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களது கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.
1. தலைவாசலில் செயற்கையான மாவிலை தோரணம் போன்று பல்வேறு 'ஹாங்கிங்ஸ்' தொங்கவிடப்படுவது எளிமையான அழகு தரும்.
2. ஹால்களில் பர்னிச்சர் செட்டிங்ஸ் மிக முக்கியமானது. அதனால், ஹாலில் உள்ள ஷோ-கேஸ்களில் பல்வேறு பொருட்களை விதவிதமாக அடுக்கி வைப்பதை காட்டிலும், ஹாலின் இதர அமைப்புகளுக்கு பொருத்தமாக உள்ள பொருட்களை மட்டும் கச்சிதமாக அடுக்கி வைப்பதே நல்ல அழகை தரும்.
3. குட்டிபசங்களின் 'டிராபி' மற்றும் 'ஷீல்டுகள்' போன்றவற்றை ஷோ-கேஸ் உள்ளே அடுக்கி வைக்காமல், சற்று உயரத்தில் அவற்றின் மேற்புறமாக வைத்தால், அது ஒரு அழகாக தோன்றும்.
4. சிறிய அளவிலான மீன் தொட்டியை ஹாலில் வைத்தால், ஒட்டு மொத்த சூழலே மாறிவிடும். நுழைவாசலுக்கு எதிராக உள்ள சுவரில் பாதி அளவுக்கு இயற்கை காட்சிகள் கொண்ட வால்பேப்பர்கள் ஒட்டியும் அழகு படுத்தலாம்.
5. அறைகள் அல்லது ஹாலின் கார்னர் பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட டெரகோட்டா வகை பானைகளை வைத்து அதன் நிறத்துக்கேற்ப செயற்கை பூங்கொத்துகளை சொருகி வைத்தால் அருமையாக இருக்கும்.
6. அறைகளின் நிறத்துக்கு தக்க ஸ்கிரீன்கள், தரை விரிப்புகள் போன்றவை அவற்றின் அழகை எடுப்பாக காட்டும்.
7. அறை சிறிய அளவுள்ளதாக இருந்தால் 'மினி பிரிண்ட்ஸ்' எனப்படும் டிசைன் பேப்பர்களை சுவர்களில் ஒட்டி வைத்து அழகு படுத்தலாம். மேலும், அந்த அமைப்புக்கு தகுந்த அளவுகளில் அழகான படங்களையும் மாட்டி வைக்கலாம்.
8. கிரானைட் மற்றும் மார்பிள் டிசைன்கள் கொண்ட பி.வி.சி தரை விரிப்புகள் அதிக செலவில்லாமல் வீட்டை அழகாக காட்டும் தன்மை கொண்டவையாக இருப்பதால் அனைத்து வீடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
9. சமையலறையில் மனதிற்கு இனிய படங்களை மாட்டி வைக்கலாம். தண்ணீர் புழங்கும் இடம் என்பதால் 'ஆண்டி ஸ்கிட்' டைல்ஸ் பதிப்பதோடு, சமையல் மேடையை பாலிஷ் செய்த கடப்பா கல் கொண்டு அமைக்கலாம்.

Related Tags :
Next Story