தண்ணீர் தொட்டிகள் அமைப்புக்கு அவசிய குறிப்புகள்


தண்ணீர் தொட்டிகள் அமைப்புக்கு அவசிய குறிப்புகள்
x
தினத்தந்தி 16 Jun 2017 8:30 PM GMT (Updated: 16 Jun 2017 10:28 AM GMT)

கழிவுநீர் இணைப்பு வசதி இல்லாத பஞ்சாயத்து பகுதிகள் அல்லது சிறிது காலம் சென்ற பிறகு கிடைக்கலாம் என்ற நகர விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வெளியேற செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தி கொள்வது நடைமுறை.

ழிவுநீர் இணைப்பு வசதி இல்லாத பஞ்சாயத்து பகுதிகள் அல்லது சிறிது காலம் சென்ற பிறகு கிடைக்கலாம் என்ற நகர விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வெளியேற செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தி கொள்வது நடைமுறை. ஆனால், இதை வீட்டின் பின்பக்கம் அமைவதுபோல இல்லாமல், முன்பக்கம் அமைத்துக்கொள்வது நல்லது. செப்டிக் டேங்கை பின்பக்கம் அமைத்து கொண்டால் சுத்தம் செய்யும்போது பல சிரமங்கள் ஏற்படும். முன்பக்கம் அதை அமைக்கும்பட்சத்தில் வேலையை எளிதாக முடிக்கலாம். பிற்காலத்தில் கழிவுநீர் இணைப்பு வசதி வந்துவிட்டாலும்கூட, சுலபமாக இணைப்பு வேலைகளை செய்துகொள்வதற்கு இந்த முறை எளிதாக இருக்கும். குடிநீர் இணைப்பு இருக்கும் தண்ணீர் தொட்டியையும் வீட்டுக்கு முன்பக்கம் அமைத்துக்கொள்வதே சிறந்தது. குறிப்பாக, கார் நிறுத்தும் இடத்தில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் மேலே அமைக்கப்படும் வாட்டர் டேங்க் அவசியமானது என்றாலும், அதை கான்கிரீட்டில் அமைக்காமல், எளிதாக பயன்படுத்தக்கூடிய வாட்டர் டேங்குகளை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

Next Story