வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கான மறு சீராய்வு கூட்டம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கான மறு சீராய்வு கூட்டம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. ஆறு பேர்கள் கொண்ட குழு, வங்கிகளின் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. அந்த குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ரிசர்வ் வங்கியானது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம். ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை. முந்தைய அளவான 6.25 சதவீதம் என்ற அளவே தற்போதும் தொடர்கிறது. மேலும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் 6 சதவீதமாக உள்ளது. வங்கிகள் பராமரிக்க வேண்டிய எஸ்.எல்.ஆர் விகிதம் 0.5 சதவீதம் குறைத்து 20 சதவீதமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் கூடுதலான நிதி புழக்கத்துக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Related Tags :
Next Story