கட்டிட வரைபட அளவில் செய்ய வேண்டியவை
வீட்டுக்கான கட்டுமான வரைபடம் போடும்போது சில விஷயங்கள் முக்கியம். அதாவது, வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் அவர்களுக்காக தரைத்தள பயன்பாடு கூடுதலாக இருக்க வேண்டும்.
வீட்டுக்கான கட்டுமான வரைபடம் போடும்போது சில விஷயங்கள் முக்கியம். அதாவது, வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் அவர்களுக்காக தரைத்தள பயன்பாடு கூடுதலாக இருக்க வேண்டும். கூட்டு குடும்பம், உறவினர்கள் அடிக்கடி வரும் வீடு என்றால் ஹால் வசதி அதிகமாக இருக்கவேண்டும். முக்கியமாக, இருக்கும் இடத்தை அதிகமாக பயன் படுத்திக்கொள்வதுபோல வரை படம் தயார் செய்ய வேண்டும். வாஸ்து நம்பிக்கை உள்ளவர்கள் அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.
மனையின் அளவு எவ்வளவு இருந்தாலும், அதை அப்படியே நமது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியாது. மனையின் அளவில் 65 சதவிகித இடத்தில் மட்டும் கட்டிடம் கட்டவேண்டும் என்பது அரசு விதிமுறை. அதனால் அந்த அளவுக்குள் அதிகபட்ச இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர, 800 சதுர அடிக்குள் வீடு அமைந்தால் கண்டிப்பாக ஒரு கார் பார்க்கிங் அளவுக்கு இடம் விடுவது அவசியம். இதனை வரைபடத்தில் காட்ட வேண்டியது கட்டாயம்.

Related Tags :
Next Story