கட்டுமான பணிகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை..


கட்டுமான பணிகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை..
x
தினத்தந்தி 24 Jun 2017 4:30 AM IST (Updated: 23 Jun 2017 5:28 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானப்பணிகள் நடைபெறும்போது பல்வேறு நிலைகளில் ‘வாட்டர் லெவல் டியூப்’ மூலமாக ஒவ்வொரு பகுதியையும் சரியான மட்டத்தில் அமைவதுபோல் கவனித்துக் கொள்வது அத்தியாவசியம்.

ட்டுமானப்பணிகள் நடைபெறும்போது பல்வேறு நிலைகளில் ‘வாட்டர் லெவல் டியூப்’ மூலமாக ஒவ்வொரு பகுதியையும் சரியான மட்டத்தில் அமைவதுபோல் கவனித்துக் கொள்வது அத்தியாவசியம். அஸ்திவார அமைப்பு, பெல்ட் கான்கிரீட், லிண்டல் மட்டம், கான்கிரீட் தள அமைப்பு ஆகிய பல கட்டுமான நிலைகளில் ‘வாட்டர் டியூப் மட்டம்’ பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல் பொருத்தும்போதும் ‘வாட்டர் லெவல்’ பயன்படுத்தி அதன் சாய்மானம் உள்ளிட்ட நேரான அமைப்புகளை சரி செய்துகொள்ளவேண்டும். தண்ணீரில் நனைத்த பிறகுதான் செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தவேண்டும். செங்கல் சுவர்கள் அமைக்கும்போது, ஒரு வரிசை கட்டியவுடன் அதன் முடிவில் குத்துக்கல் அமைப்பில் வைத்து கட்டப்படுவது பாதுகாப்பான முறையாகும்.

சுவர்கள் கட்டப்படும்போது, ஒரு நாளில் 5 அடி உயரத்துக்கும் அதிகமாக கட்டப்படுவது கூடாது. அவ்வாறு அமைக்கப்பட்டால் சுவரின் தரம் குறைவாக அமைந்துவிடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

செங்கல் சுவரோடு, காலம் அல்லது பீம் இணைப்புகள் வரும்போது கம்பி வலை வைக்கப்பட்டு தக்க கலவை கொண்டு கட்டப்பட வேண்டும். கலவையானது, மணல், ஜல்லி சிமெண்டு, தண்ணீர் போன்றவை சரியான விகிதத்தில் இருப்பது முக்கியம். குறிப்பாக, மணலை நன்றாக சலிக்கப்பட்டு பயன்படுத்துவது பல நன்மைகளை தருவதாக அமையும்.


Next Story