வீட்டின் வெளிப்புற பராமரிப்புகள்


வீட்டின் வெளிப்புற பராமரிப்புகள்
x
தினத்தந்தி 24 Jun 2017 4:30 AM IST (Updated: 23 Jun 2017 5:32 PM IST)
t-max-icont-min-icon

தனி வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகிய எதுவாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க வேண்டும்.

னி வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகிய எதுவாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைப்பதோடு, கேட், கிரில்கள், காம்பவுண்ட் விளக்குகள், வீட்டிற்கு வெளியில் உள்ள ஜன்னல் கிரில்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் ஒட்டு மொத்த வீடும் சுத்தமாக காட்சி தரும். காம்பவுண்டுக்கு உட்புறமாக செடி கொடிகள் இருப்பின் அவற்றில் இருக்கும் காய்ந்த இலைகளை கச்சிதமாக அகற்றி விட்டு, மண் தொட்டிகளை நகர்த்தி, கீழே படிந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வைக்கப்படும் போது வீடு கண்களை கவருவதாக இருக்கும். கதவு, நிலைகள் போன்றவற்றை துணியினால் துடைத்து, ஒட்டடை இன்றி சுத்தம் செய்வதும் வீட்டுக்கு தனி அழகை தருவதாக இருக்கும்.


Next Story