பத்திரங்களின் உண்மை தன்மையை கவனியுங்க..


பத்திரங்களின் உண்மை தன்மையை  கவனியுங்க..
x
தினத்தந்தி 23 Jun 2017 11:30 PM GMT (Updated: 23 Jun 2017 12:15 PM GMT)

வீடு அல்லது மனை வாங்கவேண்டும் என்று குடும்ப ரீதியான முடிவை எடுத்து பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் செயல்படும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

வீடு அல்லது மனை வாங்கவேண்டும் என்று குடும்ப ரீதியான முடிவை எடுத்து பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் செயல்படும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது வாங்கும் மனை அல்லது வீட்டிற்கான ஆவணங்கள் மற்றும் அதன் மூலப்பத்திரங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மையை பல நிலைகளில் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தின் பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் போன்றவற்றையும் கச்சிதமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

நகல் பெறுங்கள்

நமக்கு தரப்பட்டுள்ள ஆவணங்களின் உண்மையை, அவற்றில் தரப்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட மனை பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், நகல் வேண்டி விண்ணப்பம் செய்யவேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட நகலையும், நம்மிடம் உள்ள ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றின் உண்மை தன்மை தெளிவாக தெரிந்துவிடும்.

தாய்ப்பத்திரங்கள் அவசியம்

மேலும் நம்மிடம் உள்ள ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் சரியானவையாக இருந்தாலும், முத்திரைத்தாள் வாங்கப்பட்ட தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு விவரங்கள் ஆகியவை சரியாக பொருந்தவேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் நம்மிடம் இருக்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதாகும். ஒருவேளை இரண்டும் சரியாக இருந்தாலும் மனை அல்லது வீட்டிற்கான தாய்ப்பத்திரங்கள் என்று சொல்லப்படும் மூலப்பத்திரங்களை பெற்று அதை ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

புகைப்படங்கள்

பொதுவாக, வீடு அல்லது மனையின் உரிமையாளர்களிடம் சம்பந்தப்பட்ட மூலப்பத்திரங்களின் ‘ஒரிஜினல்’ அனைத்தும் இருக்கும். முக்கியமாக அந்த பத்திரங்கள் அவர்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக அவசியம். மேலும், தற்போதைய நடைமுறைப்படி பத்திரப்பதிவு சமயத்தில், சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகியோர்களது புகைப்படங்கள் பத்திரங்களில் ஒட்டப்பட்டு, தகுந்த அடையாள அட்டைகளை ஆய்வு செய்து நபர்களை உறுதி செய்யப்பட்ட பிறகே பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதால் போலிகள் தவிர்க்கப்படுகின்றன.

Next Story