சென்னை ஒட்டியம்பாக்கத்தில் பாதுகாப்புடன் கூடிய அழகான தனி வீடுகள்


சென்னை ஒட்டியம்பாக்கத்தில் பாதுகாப்புடன்  கூடிய அழகான தனி வீடுகள்
x
தினத்தந்தி 1 July 2017 3:45 AM IST (Updated: 30 Jun 2017 4:25 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது இன்றியமையாததாகி விட்டது என்றால் அது மிகையல்ல. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் வீடு மனை, அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடு, வில்லா இதில் எதுவாக இருப்பினும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.

ன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது இன்றியமையாததாகி விட்டது என்றால் அது மிகையல்ல. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் வீடு மனை, அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடு, வில்லா இதில் எதுவாக இருப்பினும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. தனது குடும்பத்தினர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்கு உகந்தது  “கேட்டட் கம்யூனிட்டி “குடியிருப்புகள் என்கிறார் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சொகுசு வில்லாகளை வழங்குவதில் மக்களிடம் நற்மதிப்பை பெற்றுள்ள ஜோன்ஸ் பவுண்டே‌ஷன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். ஜோன்ஸ். சென்னை ஓட்டியம்பாக்கத்தில், ஜோன்ஸ் கேசியா மற்றும் ஜோன்ஸ் டான் 2  ஆகிய “கேட்டட் கம்யூனிட்டி“ சொகுசு குடியிருப்புகள் முடியும் தருவாயில் உள்ளன என்றார். இன்றைய மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதியை அமைதித்திட வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் அவர் கூறுகையில் :

ஜோன்ஸ் கேசியாபாதுகாப்பான சூழல்

சென்னை ஓட்டியம்பாக்கத்தில் ரம்மியமான சூழலில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் எங்கள் நிறுவனம், ஜோன்ஸ் கேசியா என்னும்  கேட்டட் கம்யூனிட்டியில் 1162 முதல் 4151 சதுர அடி வரையில் உள்ள, 168 அழகான பிரீமியம் வில்லாக்களை கட்டி வருகிறது. இவை தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சொகுசு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாகவும் குடியிருப்போரின் வசதிக்காகவும் குடியிருப்பு பகுதியின் உள்ளேயே நீச்சல் குளம், சூப்பர் மார்க்கெட், உடற்பயிற்சி கூடம், பார்ட்டி ஹால், தியானம் செய்வதற்கான தனி ஹால், குழந்தைகள் காப்பகம், கிளினிக், விளையாட்டு கூடம், குழந்தைகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கென அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்கா என பல வசதிகளையும் ஒருங்கிணைத்துள்ளோம்.

மேலும் ஒவ்வொரு வில்லாகளுக்கும் விசாலமான தனி கார் பார்க்கிங், 24 மணி நேர பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா. சூரிய ஒளியுடன் கூடிய பேக்அப் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஜோன்ஸ் கேசியா வில்லாக்களில் அமைந்துள்ளது என்றார். இந்த சொகுசு வில்லாகளின் விலை ரூ.55 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த சொகுசு வில்லாகள் நடுத்தர மக்களுக்கு ஏற்ற விலையில் இருப்பதால் இது ஒரு சரியான தேர்வாகவும். குறைவான விலையில் நிறைவான இல்லத்தை தேர்ந்தேடுக்கலாம். மேலும்  இந்த குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் பல
IT
பார்க் மற்றும் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளதால் இந்த கேட்டேட் கம்யூனிட்டி வில்லாகள் மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளது.

ஜோன்ஸ் டான் 2 வில்லாக்கள்

சென்னைக்கு மிக அருகில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்று OMR
சாலையில் அமைந்துள்ள பொன்மார் பகுதி. GST சாலை மற்றும் பல IT பார்க் அருகில் அமைக்கப்பட்டுள்ளது JFPL நிறுவனத்தின் ஜோன்ஸ் டான் 2 வில்லா. இங்கு 1048 அடி முதல் 2454 அடி வரை உள்ள சொகுசு வில்லாகள் மிகுந்த கலைநயத்துடன் அழகான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான தோற்றத்துடன்  கூடிய  இந்த 70 சொகுசு வில்லாவும் நிச்சயம் குடியிருப்போருக்கு ஒரு இனிமையான அனுபவத்தை அளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. ஒரு குடும்பத்திற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் கிடைப்பதால் அன்றாட வாழ்கை இனிதே  அமையும்.

சரியான தேர்வு

இங்கு குடியிருப்பவர்களின் வசதிக்காக தெருக்களில் சூரிய ஒளி விளக்குகள், ஜாகிங் மற்றும் நடைப்பயிற்சிக்கு தனி ட்ராக். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக  தனித்தனி விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் என பல அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த 70 பிரீமியம் வில்லாகளும் 41 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அமைதியான சூழல், நெரிசல் இல்லா போக்குவரத்து வசதி, சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று வசதி இவை அனைத்துடன் கூடிய ஜோன்ஸ் டான் 2 வில்லாகள்  ஒரு குடும்பத்திற்கான சரியான தேர்வாகஇருக்கும் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.  

JFPL
வெற்றியின் ரகசியம்

தங்களது அனுபவத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழகான மற்றும் தரமான கட்டிடங்களை வடிவமைத்து கொடுப்பதில் பெயர் பெற்றுள்ளது JFPL நிறுவனம். மேம்பட்ட தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி கட்டுமான பணிகள் செய்யப்பட்டதால் தரத்திலும், நுணுக்கத்திலும் எந்த ஒரு குறையும் இருக்காது என்றார்.

தங்களின் அனைத்து கட்டிடங்களுக்கும் சிறந்த கட்டுமான பொருட்கள், வாஸ்து படி கட்டிட அமைப்பு, குறித்த நேரத்தில் ஒப்படைத்தல், சூரிய ஒளி மற்றும் காற்று வசதியுடன் அமைத்தல் இவை அனைத்தும் தான் JFPL நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். கட்டுமான நிறுவனங்களின் பட்டியலில்
JFPL
நிறுவனம் முன்னணி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோன்ஸ் கேசியா மற்றும் ஜோன்ஸ் டான் 2 இவை இரண்டும் JFPL நிறுவனத்தின் தலைசிறந்த படைப்புகளாகும் என்றார் எம். ஜோன்ஸ். மேலும் விபரங்களுக்கு : 9360046004. இணையதளம்:

www.jonesfoundations.com

Next Story