மணல் பெறுவதற்கான அரசின் இணையதள சேவை தொடக்கம்


மணல்  பெறுவதற்கான  அரசின் இணையதள  சேவை  தொடக்கம்
x
தினத்தந்தி 1 July 2017 3:30 AM IST (Updated: 30 Jun 2017 4:29 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகள் செய்ய பற்றாக்குறையாக உள்ள மணல் தட்டுப்பாட்டை அகற்ற அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக

ட்டுமான பணிகள் செய்ய பற்றாக்குறையாக உள்ள மணல் தட்டுப்பாட்டை அகற்ற அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக தமிழ்நாடு மணல் இணைய சேவையும்   (www.tnsand.in), மொபைல் போன் செயலியும்   (tnsand)  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேரம் ஒதுக்கப்படும்

கட்டுமான பணிகளுக்கு மணல் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக, இப்போது இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் மணலுக்கான, முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. இதன் மூலம் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லாமல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகள் அல்லது மணல் விற்பனை நிலையங்களுக்கு வந்து நேரடியாக மணலை பெற்று செல்லலாம்.

தக்க பயிற்சி

மணல் பெற்று கொள்ள கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் மொபைல் போன் செயலி ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வி‌ஷயங்களுக்காக தனியாக ஒரு உபயோகிப்பாளர் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.

இணையம் மூலம் முன்பதிவு

‘இணைய சேவை வழியாக மணல் கிடைப்பது ஜூலை 1–ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அந்த நாளிலிருந்து பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் அவர்களது மணல் தேவையை இணைய தளம் மூலம் மட்டும் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாக கட்டுமான பணிகளுக்கான மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணலும் தடைகள் இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கவும் வழி ஏற்படும்..’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story