கட்டுமான பணிகளில் திடீர் மாற்றம் கூடாது


கட்டுமான  பணிகளில்  திடீர் மாற்றம்  கூடாது
x
தினத்தந்தி 1 July 2017 1:30 AM IST (Updated: 30 Jun 2017 4:35 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது வேண்டிய உறவினர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள், நண்பர்கள் வழங்கும் அறிவுரைகள், பிறரது விருப்பத்திற்கேற்ப மாறும்

ட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது வேண்டிய உறவினர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள்,  நண்பர்கள் வழங்கும் அறிவுரைகள், பிறரது விருப்பத்திற்கேற்ப மாறும் குடும்ப அங்கத்தினர்கள் விருப்பம் என்ற சூழலில், கட்டுமான பணியில் திடீர் மாற்றங்கள் செய்வது செலவை அதிகப்படுத்தும் நடவடிக்கையாக அமையும்.

 மேலும், மூலப்பொருட்களின் எதிர்பாராத விலையேற்றம், இயற்கையாக ஏற்படும் சூழ்நிலைகளால் கட்டுமான மூலப்பொருட்கள் சேதம் அடைவது, வழக்கமான பணியாளர்களின் விடுமுறை காரணமாக வேறு நபர்களை அவசரமாக நியமிப்பது போன்ற வகைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். முன்னதாக திட்டமிட்டதை விடவும் வேறு பணிகளை செய்வதில்தான் கட்டுமான செலவுகள் கூடுகின்றன என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது விட்டுவிட்டால் பிறகு எப்போது செய்வது..? என்ற மனநிலையில் திடீரென எடுக்கும் முடிவுகள் காரணமாக ‘பட்ஜெட்’ கணக்கிட்டதை விடவும் அதிகமாகிவிடும் வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

Next Story