நலம் தரும் வீட்டு பராமரிப்புகள்


நலம் தரும் வீட்டு பராமரிப்புகள்
x
தினத்தந்தி 7 July 2017 10:30 PM GMT (Updated: 7 July 2017 2:09 PM GMT)

பெரிய அட்டை பெட்டிகளில் உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன..? என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டிமேல் ஒட்டி லாப்டில் அடுக்கி வைப்பது நல்லது.

ப்போர்டுகள்: ஆறுமாதத்திற்கு ஒரு முறை அனைத்து கப்போர்டுகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து விட்டு, துணியால் துடைத்து, அவற்றில் விரிக்கப்பட்டுள்ள பேப்பர் அல்லது ‘ஷீட்களை’ மாற்றுவது முக்கியம். வீடுகளில் பேப்பரை கப்போர்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவதை விடவும், கனமான ‘சார்ட் பேப்பர்’, பிரவுன் ஷீட் அல்லது பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தலாம். அழகாக இடைவெளி விட்டு துணிகள் உள்ளிட்ட மற்ற பொருட்களை தனித்தனி அடுக்குகளில் வைத்துக் கொள்ளலாம்.

பரண்கள்: பெரிய அட்டை பெட்டிகளில் உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன..? என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டிமேல் ஒட்டி லாப்டில் அடுக்கி வைப்பது நல்லது. அதன் மூலம் அவற்றை எடுக்கவேண்டி வரும்போது, எதை எடுப்பது என்பதை அறிந்து எடுக்க சுலபமாக இருப்பதோடு, பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

படிக்கும் அறை:
பிள்ளைகள் படிக்கும் அறையில் உள்ள புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி இருந்தால், அவர்களுக்கு படிக்கும் மனநிலை பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து, வீட்டுப்பாடங்களை செய்ய மேசையில் தக்க இடம் ஒதுக்கப்பட வேண்டும்.


Next Story