எளிதில் இடம்பெயரும் குட்டி வீடுகள்


எளிதில்  இடம்பெயரும் குட்டி  வீடுகள்
x
தினத்தந்தி 8 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 7:47 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறை காலங்களில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்று இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு, மனதை கொள்ளை கொண்ட இடத்திலேயே நம்மால் ஓரிரு நாட்கள் தங்க முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்..?

விடுமுறை காலங்களில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்று இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு, மனதை கொள்ளை கொண்ட இடத்திலேயே நம்மால் ஓரிரு நாட்கள் தங்க முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்..?

கம்பேக்ட் வீடுகள்


அவ்வாறு தங்குவது சாத்தியம்தான் என்று வட அமெரிக்க மாகாணத்தின் ஆர்க்கிடெக்ட், அல்பெர்ட்டோ கோன்சாலெஸ் என்பவர் கூறுகிறார். அதாவது, காம்பேக்ட் வீடுகள் எனப்படும் குட்டி வீடுகள் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்வதோடு, அத்தகைய வீடுகளை கச்சிதமாக வடிவமைத்தும் தருகிறார்.  

இன்வர்ட்டர் மின்சாரம்

அதிகபட்சமாக ஏழு அல்லது எட்டு பேர் வரையிலும் தங்குவதுபோன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, வீட்டிற்கான மின்சார தேவைகள் இன்வர்ட்டர் மூலமாக பெறப்படுகிறது. தொலை தூரம் பயணம் செல்பவர்கள் அல்லது காடுகளில் அட்வென்சர் பயணம் செல்பவர்கள் போன்றவர்களுக்கு இத்தகைய ‘காம்பேக்ட் வீடுகள்’ பல வகையிலும் உபயோகமாக இருக்கின்றன.

எடை குறைவு

இத்தகைய கம்பேக்ட் வீடுகள் எடை குறைந்த பொருட்களான பைபர் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் அமைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த வீடும் மரம், கண்ணாடி மற்றும் பைபர் கிளாஸ் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட, இந்த வீட்டின் மொத்த பரப்பளவானது 120 சதுர அடியாக இருப்பதோடு, மேற்கூரை 12 அடி உயரம் கொண்டது.

இழுத்து செல்லலாம்

ஒரு வீட்டில் அமைக்கப்படும் எல்லாவித வசதிகளும் உள்ள இந்த குட்டி வீட்டில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உண்டு. எங்கு வேண்டுமானாலும் வீட்டை நகர்த்திக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது. நாம் பயணம் செய்யும் வாகனத்துடன் இந்த ‘மினி வீட்டை’ பந்து போல டை–அப் செய்து பின்னாலேயே இழுத்துச்செல்லலாம். வீட்டின் ஒட்டு மொத்த மொத்த எடை 300 கிலோவாக இருப்பதால் சுலபமாக கட்டி எடுத்துச்சென்று தங்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

எச்சரிக்கை அலாரம்

எடை குறைவாக இருப்பதால் நாம் வெளியில் செல்லும் சமயங்களில் வேறு யாராவது தூக்கி சென்று விடுவார்கள் என்ற கவலை இல்லை. காரணம் மொத்த வீடையும் தரையோடு இணைத்து ‘லாக்’ செய்து விடலாம். தக்க சாவி இல்லாமல் திறக்க முயற்சிக்கும்போது அல்லது யாராவது நகர்த்தும்போது நமது செல்போனில் உள்ள அலாரம் நமக்கு எச்சரிக்கை தகவலை தெரிவித்துவிடும்.      

உலக நாடுகள்

உலக நாடுகள் பலவற்றிலும் வெவ்வேறு வகையான குட்டி வீடுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றை மக்கள் தேவையான இடங்களுக்கு இழுத்துச்சென்று பயன்படுத்துகிறார்கள். வேலைகள் முடிவடைந்த பிறகு அவற்றை எடுத்துச்சென்று விடுகிறார்கள். அலுமினியத்தால் அமைக்கப்படும் ‘கிரிக்கெட் டிரெயிலர்’, கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்பட்ட மல்ட்டி செல்லுலர் கேரவன், கம்போர்ட் டிரெயின் ஹோம், ‘போப்போலோ’ வகை வீடுகள், சீனாவில் பிரபலமாக உள்ள டிரை சைக்கிளில் எடுத்துச்செல்லும் வீடுகள், சுமயா வீடுகள், இரண்டு அடுக்குகள் கொண்ட ஜப்பானிய நகரும் வீடுகள் என்று விதவிதமான பெயர்களில், உலக நாடுகள் பலவற்றிலும் குட்டி வீடுகள் பயன்பாட்டில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

Next Story