தெரிந்து கொள்வோம்: ‘லாப்ட் ஸ்லாப்’


தெரிந்து கொள்வோம்: ‘லாப்ட் ஸ்லாப்’
x
தினத்தந்தி 14 July 2017 9:30 PM GMT (Updated: 14 July 2017 10:26 AM GMT)

பொதுவாக, ஒரு அறையின் குறிப்பிட்ட பக்கத்தில் அமைந்த சுவருக்கு 7 அடி உயர மட்டத்தில் இரண்டரை அடி அகலத்தில் ‘லாப்ட்’ எனப்படும் பரண்கள் அமைக்கப்படுவது பல இடங்களில் வழக்கம்.

பொதுவாக, ஒரு அறையின் குறிப்பிட்ட பக்கத்தில் அமைந்த சுவருக்கு 7 அடி உயர மட்டத்தில் இரண்டரை அடி அகலத்தில் ‘லாப்ட்’ எனப்படும் பரண்கள் அமைக்கப்படுவது பல இடங்களில் வழக்கம். அதன் மூலம் கிடைக்கும் ‘ஸ்டோரேஜ் ஸ்பேஸ்’ எனப்படும் மேல்நிலை அலமாரியில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொள்ள முடியும்.

‘லாப்ட் ஸ்லாப்’ (தாழ் தளக்கூரை) என்றும் குறிப்பிடப்படும் மேற்கண்ட முறையானது, அறைகளில் அமைக்கப்படும்போது அதன் மூன்று பக்கங்களிலும் வலுவாக தாங்கி நிற்கும்படி கட்டமைக்கப்படுவது அவசியம். பொதுவாக, எவ்விதமான பொருட்களை அந்த ‘லாப்ட்’ அமைப்புக்குள் வைக்கப்படும் என்பதை பொறுத்து அதன் வடிவமைப்பு தீர்மானிக்கப்படவேண்டும்.

வழக்கமாக எம்.25 கிரேடு கான்கிரீட் கலவை கொண்டு, தக்க இரும்பு கம்பிகள் மூலம் சென்டரிங் வேலைகள் செய்யப்பட்டு உருவாக்கப்படுவது வழக்கம். இந்த கட்டமைப்பானது அறைகளின் ஒரு பக்க சுவரின் மேல்புறத்தில் குட்டி அறை போல தோற்றமளிக்கும். அதற்கு ஸ்லைடிங் டோர்கள் அல்லது வெளிப்புறம் திறக்கும்படியான டோர்கள் பொருத்தப்படுவது வழக்கம்.  

மேற்கண்ட ‘லாப்ட் ஸ்லாப்’ அமைக்கும்போது அறைகளின் உட்புற கூரை மட்டம் சுமாராக இரண்டு அடிகளுக்கு குறைவாக அமையும் என்பது கவனிக்கப்படவேண்டும். இரண்டு அறைகளுக்கு மத்தியில் இருப்பது போலவும் அமைக்கலாம் என்றாலும், ஒரு பக்கமாக திறக்கும்படியாகத்தான் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் பல்லிகள் உள்ளிட்ட சிறுசிறு பூச்சிகள் உள்ளே நுழைந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Next Story