தள மட்டம் அமைக்கும்போது கவனியுங்க...


தள மட்டம்  அமைக்கும்போது கவனியுங்க...
x
தினத்தந்தி 15 July 2017 3:15 AM IST (Updated: 14 July 2017 3:59 PM IST)
t-max-icont-min-icon

தரைமட்ட அளவுக்கும் கீழ்ப்புறமாக அமைக்கப்பட்டிருக்கும் ‘கிரேடு பீம்’–உடன் இணைத்து, ‘பிளிந்த் லெவல்’ எனப்படும் தளமட்டம் வரை

ரைமட்ட அளவுக்கும் கீழ்ப்புறமாக அமைக்கப்பட்டிருக்கும் ‘கிரேடு பீம்’–உடன் இணைத்து, ‘பிளிந்த் லெவல்’ எனப்படும் தளமட்டம் வரை கட்டப்படும் கட்டுமான வேலைகளுக்கு, ‘பிரிகாஸ்ட் கான்கிரீட்’ கற்கள் அல்லது ‘பிளை ஆஷ்’ கற்களையோ பயன்படுத்த வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் காரணமாக, தரைத்தளத்தின் உறுதி அதிகமாகிறது. அதன் காரணமாக, ஒட்டுமொத்த கட்டிட செலவில் 2 சதவிகிதம் வரை குறைவதோடு, வேலையும் சீக்கிரமாக முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், தளமட்டத்தை வெறும் மண் கொண்டு நிரப்புவதற்கு பதிலாக, ‘கிர‌ஷர் டஸ்ட்’, செஞ்சரளை மண் கலவை, செங்கல் ரப்பீஸ் மற்றும் கான்கிரீட் ரப்பீஸ் போன்றவற்றை பல்வேறு அடுக்குகளில் தகுந்த விதத்தில் கெட்டியாக அமைக்கலாம். அதற்கு மாறாக, ஆற்று மணல் அல்லது அஸ்திவாரம் எடுக்கப்பட்டபோது கிடைத்த களிமண் அல்லது இதர மண் வகைகளை அப்படியே பயன்படுத்துவது பொருத்தமான முறையாக இருக்காது. மேலும், தரைமட்ட தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றையும் கான்கிரீட் கற்கள் கொண்டு அமைத்தால் செலவு குறைவாக இருப்பதோடு, தக்க வலிமையுடனும் இருக்கும்.

Next Story