ஆழ்குழாய் கிணறுகளுக்கு உகந்த நீர் மூழ்கி மோட்டார்கள்


ஆழ்குழாய் கிணறுகளுக்கு உகந்த நீர்  மூழ்கி மோட்டார்கள்
x
தினத்தந்தி 22 July 2017 4:45 AM IST (Updated: 21 July 2017 6:15 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கு வேண்டிய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஈசானியம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

வீடுகளுக்கு வேண்டிய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஈசானியம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு ஆழ் குழாய் கிணறு அமைக்கும்போது ‘சப்மெர்சிபிள்’ எனப்படும் நீர்மூழ்கி மோட்டார்கள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பூமிக்கடியில் ஆழமாக பொருத்தப்படும் அத்தகைய மின்மோட்டார்களை தேர்ந்தெடுக்கும்போது, தண்ணீர் உட்புகும் வாய்ப்பில்லாத மின் மோட்டார் வகைகளை பயன்படுத்துவது பாதுகாப்பான முறையாகும். அதன் மூலம் மின்கசிவால் ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத்தில் உள்ள பகுதிகளில் நீண்ட நேரம் இயங்கும்போது அவை வெப்பத்தை தாங்கி இயங்கவேண்டியதாக இருக்கும். தற்போது அதிகப்படியான வெப்பத்தையும் தாக்கு பிடிக்கும் மோட்டார்கள் சந்தையில் கிடைக்கின்றன. மேலும், அவற்றின் இயக்கத்தால் வெப்பம் அதிகமாகி விட்டது என்பதை உணர்த்தக்கூடிய அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களும் இப்போது கிடைக்கின்றன. அத்தகைய மின்மோட்டார்களை பயன்படுத்தினால், பழுதுகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் தவிர்க்கப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.

Next Story