குடியிருப்புகள் வாடகை சட்டத்தில் புதிய நடைமுறைகள்
நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் காரணமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் காரணமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுள்ளது. அவ்வாறு வருபவர்கள் குடியிருப்பதற்காக, பெரும்பாலும் வாடகை வீடுகளைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் வாடகை வீடுகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான கட்டிடங்களை அமர்த்தும் சமயங்களில், முன்பணம், வாடகை ஒப்பந்தம் மற்றும் குத்தகை ஆகிய விஷயங்களில் கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகியோர்களுக்கு இடையில் சிக்கல்கள் எழுகின்றன.
மத்திய அரசின் மாதிரி சட்டம்
வீடுகள், மனைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றை வாடகைக்கு விடும் சமயத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, மத்திய அரசால் மாதிரி வீட்டு வாடகை சட்டம் ((NEW MODEL TENANCY ACT) 2015–ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடந்த 1960–ம் ஆண்டில் குடியிருப்பு கட்டிட வாடகை மற்றும் குத்தகை கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி இருந்தது. இப்போதைய கால மாற்றம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக, மேற்கண்ட சட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படும் சூழல் உருவாகி உள்ளது.
மாற்றங்கள் தேவை
‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததின்போது, வாடகை கட்டுப்பாடு சட்டத்திற்கான மாற்றத்தை மத்திய அரசு பரிந்துரைத்தது. மேலும், கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும் ‘தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டத்தை’ புதியதாக இயற்ற வேண்டிய நிலையில், புதிய சட்டத்துக்கான மசோதாவை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது.
புதிய சட்டம்
ஏற்கெனவே, பல்வேறு மாநில அரசுகள் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் வீட்டு வாடகை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, மாதிரி சட்டத்தை பின்பற்றி, நகர்ப்புற வளர்ச்சித்துறை ‘தமிழ்நாடு, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்–2017’ என்ற சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இரு தரப்பு நன்மைகள்
மேற்கண்ட சட்டத்தின்படி, குத்தகைதாரர், வாடகைதாரர் இடையில் எற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுவதோடு, இரு தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் ஆகியவையும் சீர் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பல்வேறு அம்சங்கள்
குறிப்பாக, குத்தகை உரிமை ஒப்பந்தம், கால அளவு, வாரிசு உரிமை, உள்வாடகைக்கான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், செலுத்தப்பட வேண்டிய வாடகையை மாற்றி அமைப்பது, அதற்கான வாடகை அதிகாரி, பிணைத்தொகை வைப்பீடு, வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீது, சொத்து பழுது பார்ப்பு, பராமரிப்பு, காலி செய்யாத பட்சத்தில் நஷ்டஈடு உள்ளிட்டவை குறித்தும் இந்த மசோதாவில் விளக்கப்பட்டுள்ளன.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
* இரு தரப்பினருக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்யப்படாமல் வாடகை அல்லது குத்தகைக்கு விடக்கூடாது.
* உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையே ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விசாரிக்க, மாவட்ட கலெக்டர் நிலையில் வாடகை அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
* மேலும், வாடகை குறித்த சிக்கல்களை விசாரிக்க நீதிமன்றம் மற்றும் அதற்கான தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
* அரசு நிறுவனங்கள் மற்றும் மத நெறி சார்ந்த வழிபாட்டு இடங்கள் சம்பந்தப்பட்ட சொத்துகள் மேற்கண்ட சட்ட வரம்புக்குள் வராது.

Related Tags :
Next Story