வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகைகள்
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வீடு கட்டும்போது அரசாங்கம் பல விதமான சலுகைகளை வழங்குகிறது.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வீடு கட்டும்போது அரசாங்கம் பல விதமான சலுகைகளை வழங்குகிறது. வங்கியில் வீட்டு கடன் பெற்று அதை முறையாக வட்டியுடன் திருப்பி செலுத்தும்போது, அரசு அளிக்கக்கூடிய வரிச்சலுகைகள் (வருமான வரிக்கான சலுகைகள்) பல விதங்களாக இருக்கின்றன. அவற்றை பற்றிய முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
அசல் மற்றும் வட்டி
வீட்டு கடனுக்கு மாத தவணையாக திரும்ப செலுத்தும் அசல் தொகை மற்றும் வட்டிக்கு வரிச்சலுகை தரப்படுகிறது. அதாவது, திரும்ப செலுத்தும் கடன் தொகையின் அசலுக்கு 80–சி பிரிவின்கீழ் ஒரு நிதி ஆண்டில் ரூ. ஒன்றரை லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். இந்த வரிச்சலுகையில் திரும்ப செலுத்தும் வட்டிக்கு ஒரு ஆண்டில் ரூ.2 லட்சம் வரையில் வரிச்சலுகை கிடைக்கும்.
வீட்டில் குடியிருந்தால்..
வங்கி கடன் மூலம் கட்டப்பட்ட வீட்டில் உரிமையாளர் குடியிருக்கும் பட்சத்தில், திரும்ப செலுத்தும் வட்டிக்கான வரிச்சலுகை வருடத்துக்கு ரூ.2 லட்சம் வரையில் அனுமதிக்கப்படும். இதற்கு மேல் உள்ள தொகை அந்த வருட வாடகை வருமான கணக்கில் சேர்க்கப்படும். வீட்டை வாடகைக்கு விடும்போது, வட்டிக்கான வரிச்சலுகை ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையில் கிடைக்கும். வாடகைக்கு விடப்பட்டதால் செலுத்தப்பட்ட வட்டித்தொகை முழுவதற்கும் வரி விலக்கு தரப்படாது.
கூடுதல் வரிச்சலுகை
முதன் முறையாக வீட்டு கடன் பெறுபவர்களுக்கு, கடன் தொகை ரூ.35 லட்சத்துக்கு மிகாமல், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமலும் இருந்து, கடன் தொகையானது 2016–17–ம் நிதி ஆண்டில் தரப்பட்டிருக்கும் பட்சத்தில், கடனுக்கான தவணைக்காலம் வரை குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு ரூபாய்.50,000 கூடுதல் சலுகை பெறலாம்.
இதர சலுகைகள்
முதன்முதலாக வீடு வாங்குபவருக்கு கூடுதலாக, வட்டி வரிச்சலுகை கிடைப்பதோடு, 80–சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூபாய் ஒன்றரை லட்சம் வரையில் திரும்ப செலுத்தும் அசல் தொகைக்கு வரி விலக்கு உண்டு. இந்த வரிச்சலுகையானது வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கும் நிலையிலும் கிடைக்கும். மேலும், வீட்டை பழுது பார்க்கும் ‘ஹோம் ரினோவேஷன்’ கடன்களுக்கு வரிவிலக்கு இல்லை. இ.எம்.ஐ என்ற மாத தவணை அதாவது திருப்பி செலுத்தப்பட்ட அசல் தொகைக்கு மட்டும் சலுகை என்பதோடு, கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்னரே செலுத்தப்படும் வீட்டு கடன் அசல் தொகைக்கு வரி விலக்கு தரப்படுவதில்லை.
பரிசீலனை கட்டணம்
வீட்டு கடன் விண்ணப்பங்களுக்கான ‘பிராசஸிங் சார்ஜ்’ என்ற பரிசீலனை கட்டணம் கடன் தொகையின் அளவுக்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தொகையானது 80–சி பிரிவின் கீழ் வரி விலக்குக்கு உரியது.
ரெஜிஸ்ட்ரேஷன் செலவு
80–சி பிரிவின் கீழ் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றுக்கான வரிச்சலுகையை பெறவும் வழியுண்டு.
மேலும், வீட்டு கடனுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி பிரிமியத்துக்கும் வரி விலக்கு தரப்படுகிறது. இந்த சலுகைகள் 80–சி பிரிவின் கீழ் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூபாய் ஒன்றரை லட்சம் என்ற அளவுக்கு உட்பட்டு கிடைக்கிறது.
இதர கடன்கள்
வங்கி அல்லது வீட்டு கடன் வசதி நிறுவனங்கள் ஆகியவற்றில் கடன் பெற்று, திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிச்சலுகை கிடைப்பதோடு, இதர தனிப்பட்ட நபர்களிடம் வீடு கட்ட கடன் பெற்றிருக்கும் பட்சத்தில், அதற்கும் வரிச்சலுகை தரப்படுகிறது. ஆனால், கடன் தொகையானது வங்கி காசோலை மூலம் பெறப்பட்டு, கடனுக்கான தவணைகளும் காசோலை மூலம் திரும்ப செலுத்தப்பட்டதாக இருப்பது அவசியம்.

Related Tags :
Next Story