முப்பரிமாண கட்டிடங்கள் உருவாகும் விதம்


முப்பரிமாண  கட்டிடங்கள்  உருவாகும் விதம்
x
தினத்தந்தி 4 Aug 2017 10:15 PM GMT (Updated: 4 Aug 2017 12:15 PM GMT)

3–டி முறையில் கட்டிட அமைப்புகளை ஒரு இயந்திரம் உருவாக்குகிறது என்பதை செய்திகளில் படித்திருப்போம்.

3–டி முறையில் கட்டிட அமைப்புகளை ஒரு இயந்திரம் உருவாக்குகிறது என்பதை செய்திகளில் படித்திருப்போம். அந்த தொழில்நுட்பம் எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் தவிர்க்க இயலாத தொழில்நுட்பமாக விளங்கக்கூடிய இந்த முறைப்படி கட்டமைப்புகளை அதிவிரைவில் அமைக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட முறையின் அடிப்படை நுட்பமானது ஒரு குறிப்பிட்ட ‘ரெஸின்’ போன்ற திரவத்தின்மீது வெவ்வேறு விதமான அலைவரிசைகளில் லேசர் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும்போது அந்த திரவம் திட வடிவத்தை அடைந்துவிடும் என்பதாகும். ஆனால், தற்போதைய முறைப்படி லேசர் கதிர்வீச்சுக்கு பதிலாக ஆக்ஸிஜனேற்ற முறை பயன்படுத்தப்படுகிறது.

அதாவது பிசின் போன்ற வேதியியல் கலவையான அட்மிக்ஸர்கள் கலக்கப்பட்ட சிமெண்டு குழம்பில் தகுந்த இடங்களில் ஆக்ஸிஜனை படிப்படியாக செலுத்துவதன் மூலம் அதை திட வடிவத்திற்கு மெல்லமெல்ல மாறும்படி செய்துவிடலாம். இந்த முறையை கையாண்டு நமக்கு தேவைப்படும் விதத்தில் முப்பரிமாண முறையில் எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கிவிட முடியும். இந்த முறையானது முப்பரிமான அச்சு வார்ப்பு   ((3D PRINTING)
   என்று குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட முறையில் ஒரிஜினல் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல்,   3D    முறையில் மினியேச்சர் கட்டிட அமைப்புகளையும் வடிவமைக்கலாம். அந்த மினியேச்சர் வடிவமானது குறிப்பிட்ட ஒரு கட்டுமான அமைப்பின் ஒட்டு மொத்த வடிவத்தையும் சிறிய அளவாக எடுத்துக் காட்டக்கூடியது.


Next Story