கட்டுமான பணிகளை எளிமையாக்கும் மாற்று வழிகள்
உலகின் அனைத்து நாடுகளிலும் கட்டிடங்கள் செங்கல் சுவர்களால் அமைக்கப்படுவதில்லை என்பதோடு, சிமெண்டு உபயோகமும் அவ்வளவாக இருப்பதில்லை.
உலகின் அனைத்து நாடுகளிலும் கட்டிடங்கள் செங்கல் சுவர்களால் அமைக்கப்படுவதில்லை என்பதோடு, சிமெண்டு உபயோகமும் அவ்வளவாக இருப்பதில்லை. அஸ்திவாரம் தவிர மற்ற கட்டமைப்புகளின் பெரும்பாலான பகுதிகள் வெவ்வேறு மூலப்பொருட்களால் வடிவமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு மேற்கண்ட முறைகள் பெரிதாக பயன்படாது என்றாலும், அனைத்து தரப்பினராலும் இப்போது கவனிக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை கணக்கில்கொண்டு மாற்று மூலப்பொருட்களை கட்டுமானத்துறை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உலகின் பல இடங்களில் சிமெண்டு, மணல் உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்களை பயன்படுத்தாமல் மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய முறைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.
ஸ்டீல் கட்டமைப்புகள்
மரங்கள் மற்றும் மண் ஆகியவற்றை பயன்படுத்தியே பெரும்பாலான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த முறையிலிருந்து மாறுபட்டு ‘ஸ்டீல்’ மூலம் வீடுகளை அமைக்கும் முறையும் பல இடங்களில் இருந்து வருகிறது. பொதுவாக ஸ்டீல் அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கான ‘ஷெட்டுகள்’ அமைப்பதில் பெரும்பங்கு கொண்டிருக்கும் நிலையில், வீடுகள் கட்டமைப்பிலும் இடம் பெற்றிருக்கின்றன. அதன் சுவர்களில் விருப்பப்படி துளையிட்டு படங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை மாட்டுவது முடியாது என்பதை தவிர வேறு பிரச்சினைகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், கட்டுமான நேரமானது 70 சதவிகிதம் வரை குறைவதாக அறியப்பட்டுள்ளது. காலப்போக்கில் பரவலான உபயோகத்துக்கு ஸ்டீல் வீடுகள் வரும்போது வழக்கமான கான்கிரீட் வீடுகளை விட விலை மலிவாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டீல் வீடு நன்மைகள்
கான்கிரீட் வகை வீடுகளை ஒப்பிடும்போது, ஸ்டீல் வீடுகள் விரைவாக அமைக்கலாம் என்பதோடு கிட்டத்தட்ட 6 சதவிகித அளவு குறைவான இடத்தையே பிடிக்கின்றன. மேலும், கச்சிதமான வடிவமைப்பு காரணமாக அழகான வடிவத்திலும் அமைக்க இயலும். அறைகளின் உட்புற சுவர்களில் ‘இன்சுலேட்டடு பேனல்கள்’ பதித்து, வெப்ப நிலையை குறைத்து, மின்சாரத்தை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்க முடியும். மேலும், சுற்றுச்சுழல் பாதிப்புகள் இல்லாத இவ்வகை வீடுகள், கான்கிரீட் வீடுகளை விட கிட்டத்தட்ட சரிபாதி குறைந்த எடை கொண்டதாக இருப்பதால், நில அதிர்வுகளை தாங்கக்கூடியதாகவும் அறியப்பட்டுள்ளது.
‘பாலி கார்பனேட்’
எடை குறைவாக இருப்பதோடு, பயன்படுத்தவும் எளிதான ‘பாலிகார்பனேட்’ வகை ‘ஷீட்கள்’ கூரை வேயவும், தரைகள் அமைக்கவும் பயன்படுகின்றன. எடை குறைவு என்பதோடு, ஸ்டீலை விடவும் எடை தாங்கும் திறனும் கொண்டவையாக உள்ளன. அதன் காரணமாக, கூரை அமைப்பது அல்லது பிரித்து மீண்டும் அமைப்பது ஆகியவை எளிதாக இருப்பதோடு, ‘பாலிகார்பனேட்’ கூரைகள் துருவால் பாதிக்கப்படுவதில்லை. வெப்பத்தை 190 டிகிரி வரையிலும் தாங்கி நின்று உழைக்கக்கூடியது. விலையும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஜிப்சம் பேனல்
வீடுகள் ஜிப்சம் பேனல்களால் கட்டப்படும்போது பீம்கள் மற்றும் காலம்கள் அவ்வளவாக தேவைப்படுவதில்லை. கட்டுமான பணிகளுக்கு மணல், நீர், செங்கல், ஸ்டீல் என எதுவும் பெரிய அளவில் தேவைப்படாததால் வேலைகள் விரைவாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 10 அல்லது 12 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம் என்ற அளவிலும் ஜிப்சம் பேனல்கள் கிடைக்கின்றன. பொதுவாக, கட்டுமான அமைப்புக்கு வழக்கமான முறையில் கான்கிரீட் அஸ்திவாரம் அமைத்துவிட்டு, சுவர்கள் உள்ளிட்ட இதர அமைப்புகளை தக்க அளவுகளில் முன் தயாரிப்பாக கொண்டு வந்து பொருத்தி கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கலாம். எடை குறைவாக இருப்பதால் பூமி அதிர்வுகள், மண்ணின் விரிவு மற்றும் சுருக்கம் ஆகிய காரணங்களால் இவ்வகை சுவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.

Related Tags :
Next Story