குடியிருப்புகளுக்கு அவசியமான தீ தடுப்பு முறைகள்


குடியிருப்புகளுக்கு  அவசியமான தீ தடுப்பு  முறைகள்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:15 AM IST (Updated: 11 Aug 2017 4:38 PM IST)
t-max-icont-min-icon

உணவை சமைக்கவும், வெப்பம், வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நெருப்பு முற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ணவை சமைக்கவும், வெப்பம், வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நெருப்பு முற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நன்மைகளை தரக்கூடியது என்றாலும் உயிர் மற்றும் உடமைகள் ஆகியவற்றில் பாதிப்பையும் பல நேரங்களில் ஏற்படுத்தி விடுகிறது. வாழ்க்கைக்கு அவசியமானது என்ற நிலையில், தவிர்க்க இயலாத சக்தியான நெருப்பு, இன்றைய நவீன கால வாழ்க்கை முறைகளில் வீடுகள் மற்றும் இதர குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்த வகையில் உருவாகி, பரவுகிறது என்பதை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

மூன்று காரணிகள்

நெருப்பு உருவாகி அருகில் உள்ள இடங்களுக்கு பரவ மூன்று விதமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவை வெப்பம், எரிபொருள் மற்றும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஆகியனவாகும். இந்த மூன்று காரணிகளில் ஒன்று தடுக்கப்பட்டாலும் நெருப்பு மேற்கொண்டு பரவாமல் அணைந்து விடும். இந்த மூன்று காரணிகளை அடிப்படையாக வைத்துத்தான் தீ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் கீழ்க்கண்ட வி‌ஷயங்களில் எச்சரிக்கையாக இருந்து பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

உருவாகும் விதங்கள்

வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளில் பாதிப்பை உண்டாக்கும் நெருப்பு நான்கு விதங்களில் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அவை :

1. காகிதம், மரங்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகிய திடப்பொருட்களால் ஏற்படுவது.

2. சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் ரசாயன திரவங்கள் போன்ற திரவ பொருட்களால் ஏற்படுவது.

3. சமையல் எரிவாயு, தொழிற்சாலைகளில் பயன்படும் ஹைட்ரஜன், மீத்தேன், எத்திலின் உள்ளிட்ட மற்ற வாயுக்களால் உண்டாவது.

4. மின்சார சாதனங்களில் ஏற்படும் பழுதுகளால் ஏற்படுவது.

நெருப்பை அணைக்கும் முறைகள்

நெருப்பை அணைக்க முக்கியமான இரண்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. முதலாவது முறை நீரை பயன்படுத்தி அணைப்பதாகும். இரண்டாவது முறை வாயுக்கள் அல்லது ரசாயன புகை மற்றும் பொடிகளை பயன்படுத்தி அணைப்பதாகும். பொதுவாக, எல்லாவிதமான நெருப்பையும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அணைப்பது ஆபத்தான முறையாகும். நெருப்பு உருவான விதத்தை பொறுத்து அதை அணைக்கும் முறைகளும் வெவ்வேறு விதங்களாக இருக்கும் என்பது கவனத்திற்குரியது.

Next Story