நிலத்தடி நீர்மட்டம் காண உதவும் பழங்கால முறைகள்
இயற்கை சக்திகளில் ஒன்றான தண்ணீர் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
இயற்கை சக்திகளில் ஒன்றான தண்ணீர் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். காலி இடங்கள், வீட்டு மனைகள், தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை வாங்குபவர்கள் அந்த இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வாறு உள்ளது..? என்பதை அறிந்து கொள்ள விரும்புவார்கள்.
நவீன முறைகள்
இன்றைய நிலையில், ‘டவுஸிங் முறை’, ‘எலக்ட்ரிகல் ரெசிஸ்டிவிட்டி’, ‘ஸ்டீல் ராடு மெத்தடு’, தேங்காய் உருட்டுதல் என்று பல்வேறு முறைகள் நிலத்தடி நீரூற்றை அறிய கையாளப்பட்டு வருகின்றன. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமான 3–டி அதிர்வலை முறையிலும் துல்லியமாக நிலத்தடி நீர் கண்டறியும் முறையை தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஈசானியம்
பொதுவாக, வீட்டு மனைகளில் ஜலமூலை என்று குறிப்பிடப்படும் வடகிழக்கு பகுதியில் ஒர் இடத்தை தேர்வு செய்து அங்கே ஆழ்குழாய் கிணறு அமைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் புவியியல் ஆய்வு மையங்கள் மூலம் குறிப்பிட்ட இடத்தில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது..? என்றும் அறிந்துகொள்ள இயலும்.
பழங்கால முறைகள்
நிலத்தடி நீ மட்டத்தை அறிய பழங்காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகள் இன்றைய நிலையில் ஆச்சரியமானவையாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் தென்படும் சில குறிப்புகளை வைத்து, பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தை அறிவதில் பயன்படுத்தப்பட்ட சுவாரசியமான சில விஷயங்களை காணலாம்.
* விவசாய நிலம் அல்லது வீட்டு மனைக்கு அருகில் நாவல் மரங்கள் இருக்கும் பட்சத்தில் 50 மீட்டர் சுற்றளவுக்குள், குறைவான ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் கிழக்கு திசையில் நிச்சயம் நீரூற்று இருக்கும் என்றும் நம்பப்பட்டது.
* அத்தி மரம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பூமிக்கு சற்று மேற்பரப்பில் அமைந்திருக்கும் என்று கணக்கில் கொள்ளப்பட்டது. கிணறுகள் அமைக்க விரும்புபவர்கள் அத்தி மரத்திற்கு பக்கத்தில் இடம் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
* மனையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளில் பெரிய அளவில் காய்கள், பழங்கள் அல்லது இலைகள் இருப்பது கவனிக்கப்பட்டது. நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகளில் அவ்வாறு அதீதமான வளர்ச்சி இருப்பதையும் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
* கரையான் புற்று உள்ள இடத்தில் நல்ல நீர் ஊற்றும் இருக்கும் என்றும் நம்பினார்கள். இன்றும் கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் ஊற்று சோதனையின்போது கரையான் புற்று உள்ள இடம் விஷேசமாக கவனிக்கப்படுகிறது.
* வீட்டு மனையில் நவதானியங்களை தூவி வைத்து, மறுநாள் எறும்புகள் அவற்றை எங்கே சேமித்து வைக்கின்றனவோ அந்த இடத்தில் நல்ல குடிநீர் கிடைக்கக்கூடிய ஊற்றுக்கண் கள் இருக்கும் என்றும் நம்பப்பட்டது.
* மனை அல்லது பூமியில் வளர்ந்த புல்லை சாப்பிட்டுவிட்டு பசுமாடுகள் அல்லது கன்றுகள் ஓய்வாக படுத்து அசைபோடும் இடத்தில் நீரூற்று அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையும் ஊர்ப்புறங்களில் வழக்கத்தில் உள்ளது.
• வாஸ்து ரீதியாக, வடகிழக்கு பகுதியில் போர்வெல் அமைக்கும்போது மனை உரிமையாளரின் ஜென்ம இராசி மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றின்படி யோகம் தரும் நேரத்தை கணக்கில் கொண்டும் கிணறுகள் அமைக்கப்பட்டன.

Related Tags :
Next Story