அழகை அதிகரிக்கும் அலங்கார வளைவுகள்


அழகை அதிகரிக்கும் அலங்கார  வளைவுகள்
x
தினத்தந்தி 24 Nov 2017 10:30 PM GMT (Updated: 24 Nov 2017 12:10 PM GMT)

பழங்கால கட்டுமானங்களில் கூடுதலான கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டுமான யுக்திகளில் அலங்கார வளைவு குறைடும் ஒன்று.

ழங்கால கட்டுமானங்களில் கூடுதலான கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டுமான யுக்திகளில் அலங்கார வளைவு குறைடும் ஒன்று. ‘ஆர்ச் அலங்காரம்’ என்று குறிப்பிடப்படும் இந்த முறையானது அறைகளின் உட்புறம் அமைக்கப்படும் நுழைவாசல்கள், சாளரங்கள், சுவர்களில் அமைக்கப்படும் துவார அமைப்புகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அந்த அமைப்புக்கு மேலுள்ள கூரையின் எடையை தாங்கும் தன்மை கொண்டதாகவும் அமைக்கப்படுகிறது.

பளு தாங்கும் அமைப்பு

‘ஆர்ச்’ முறைக்கு பழக்கத்துக்கு வருவதற்கு முன்னர், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள துவாரங்களுக்கு மேலுள்ள கட்டமைப்பின் எடையை தாங்கும் விதத்தில் தூண்கள் அல்லது பீம்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் அவை வளைந்து விடுவதால், கீழ்ப்பகுதியில் படிப்படியாக விரிசல்கள் உருவாகி உடைந்துவிடுவது அறியப்பட்டது. அந்த நிலையில் ‘ஆர்ச்’ அமைப்பு நடைமுறைக்கு வந்தது.

பல்வேறு பொருட்கள்

மேற்கண்ட, ‘ஆர்ச்’ கட்டுமானம் சிறிய செங்கற்கள், இதர வகை கற்கள், கான்கிரீட், மரம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. கச்சிதமான கணக்கீடுகளுக்கு உட்பட்ட வளைவான வடிவம் காரணமாகவும், கற்கள் ஒன்றோடு ஒன்று அழுத்திக்கொண்டு இருப்பதாலும் வெடிப்புகள் உண்டாவதில்லை. அதன் வளைவான அமைப்பு காரணமாகவும், கட்டுமான பொருட்கள் அழுத்தத்தை தாங்க கூடிய வகையில் இருப்பதாலும், ‘ஆர்ச்’ சிறந்த முறையாக வல்லுனர்களால் கருதப்பட்டது. அறைகளின் அழகை அதிகரிக்கும் ‘ஆர்ச்’ அமைப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

‘செக்மெண்டல் ஆர்ச்’

அரை வட்டத்தை விடவும் குறைவான அளவு கொண்ட அமைப்புகள் செக்மெண்டல் ஆர்ச் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, பீம் அமைப்புக்கு மாற்றாக சற்றே வளைவாக அமைக்கப்படும் இவை பளு தாங்குவதாகவும், அழகாகவும் காட்சி அளிக்கின்றன.

‘அரை வட்ட ஆர்ச்’

இவ்வகை ஆர்ச் வகைகள் கச்சிதமான அரை வட்டத்தில் இருப்பதோடு, அதன் மையப்புள்ளி சரியாக அதன் ஒட்டுமொத்த அகலத்தின் நடுப்பகுதியில் அமையும். சுவரில் அமைக்கப்படும் இவ்வகை ஆர்ச் அடிப்பகுதியானது சரியான கிடைமட்ட நேர்கோட்டில் இருப்பது முக்கியம்.

‘குதிரை லாட வடிவ ஆர்ச்’

அரைவட்ட ஆர்ச்சை விட சற்று அதிகமான பரப்பளவு கொண்ட இந்த அமைப்பு அதன் வடிவம் காரணமாக குதிரை லாட ஆர்ச் என்று குறிப்பிடப்படுகிறது. ஆர்ச் கட்டுமானங்களுக்கான வழக்கமான முறைகள்தான் இதற்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆர்க்கிடெக்சர் முறைகளில் இந்த வடிவமானது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.      

‘பாயிண்டடு ஆர்ச்’

அரைவட்டமான அலங்கார வளைவுகள் வரிசையில் இவ்வகை குறிப்பிடத்தக்கது. பெயருக்கு ஏற்றாற்போல அதன் மேற்புறத்தின் சரியான மையப்பகுதி சற்றே கூரான வடிவத்தில் அமைக்கப்படுகிறது. முகலாயர் கட்டிடக்கலை வடிவங்களில் இவ்வகை பரவலாக காணப்படுகிறது. இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் ‘ஆர்ச்’ பகுதி சற்று கூடுதல் இட வசதி உள்ளதாக காணப்படும்.

‘வெனிஷியன் ஆர்ச்’

இவ்வகை அமைப்புகளில் ஆர்ச்சின் உட்புற வளைவும், வெளிப்புற வளைவும் ஒரே மாதிரியாக காணப்படுவதில்லை. அதாவது மேல்புறம் கூரானதாகவும், கீழ்ப்புறம் வளைவானதாகவும் உள்ள அமைப்பாக கருதலாம்.

மேற்கண்டவை தவிர, ’புளோரென்டைன் ஆர்ச்’, ‘ரிலீவிங் ஆர்ச்’, ‘ஸ்டில்ட்டடு ஆர்ச்’, ‘செமி– எல்லிப்டிகல் ஆர்ச்’ என்றும் பல வகைகள் நடைமுறையில் இருக்கின்றன. அனைத்து ஆர்ச் வகைகளும் அவற்றின் அமைப்பை பொறுத்து ஒன்றிலிருந்து ஐந்து விதமான மையங்கள் கொண்டதாக ஆர்க்கிடெக்சர் முறைப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலை நாட்டு முறையாக இருந்தாலும் மேற்கண்ட முறைகள் நமது நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக, சமையலறைக்கான நுழை வாசலை

மேற்கண்ட முறைகளில் ஒன்றை பயன்படுத்தி அமைக்கப்படுவதை பலரும் கவனித்திருக்கலாம். 

Next Story