இரும்பு கழிவு மூலம் செங்கல் தயாரிப்பு


இரும்பு  கழிவு  மூலம்  செங்கல்  தயாரிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2017 9:30 PM GMT (Updated: 1 Dec 2017 1:23 PM GMT)

கட்டுமான பணிகளில் பரவலாக பயன்பாட்டில் இருந்து வரும் செங்கலுக்கு மாற்றாக பல்வேறு பிளாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ட்டுமான பணிகளில் பரவலாக பயன்பாட்டில் இருந்து வரும் செங்கலுக்கு மாற்றாக பல்வேறு பிளாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி, செங்கலுக்கு மாற்றாக உள்ள தயாரிப்பை பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது. அதாவது, இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் மீதமாகும் துகள்களை பயன்படுத்தி இவ்வகை கற்கள் தயாரிக்கப்படுகின்றன.

இரும்பு கழிவு

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த வகை இரும்பு கழிவுகளானது வருடத்துக்கு இலட்சக்கணக்கான டன்கள் என்ற அளவில் தேங்குவதாக புள்ளி விபரங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்று முறையிலும் பயன்படுத்த வேண்டிய நிலையில், அவற்றை மூலப்பொருளாக கொண்டு செங்கல் போன்ற கற்களை தயாரித்து கட்டுமான பணிகளில் பயன்படுத்தவும் இயலும் என்று வல்லுனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பயன்படும் விதம்

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகள் ‘வேல்ஸ் ஸ்லாக்’ (கீணீமீறீக்ஷ் sறீணீரீ) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக, அவை பெரிய பாறைகளைப்போன்று தோற்றம் தரும். அவற்றை எவ்விதமாக பயன்படுத்துவது என்ற வழிமுறைகள் அறியப்படாத காரணத்தால் நீண்ட காலமாக அவை கழிவுப்பொருளாகவே பார்க்கப்பட்டுள்ளன. அவ்வப்போது சாலைகள் அல்லது காலி நிலங்களில் இருக்கக்கூடிய பள்ளங்களை நிரப்பும் பணிகளில் அந்த இரும்பு கழிவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில் அவற்றை பயன்படுத்தி செங்கல் போன்ற கட்டுமான பொருளை தயாரிக்க இயலும் என்று அறியப்பட்டது.

பல்வேறு பொருட்கள்

இரும்பு, சுண்ணாம்பு, சிலிகான் ஆக்ஸைடு, மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் மற்றும் இதர உலோக ஆக்ஸைடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் வேல்ஸ் ஸ்லாக் இரும்பு கழிவில் இருப்பதை அறிந்த வல்லுனர்கள், அவற்றை செங்கல் வடிவில் தயாரித்தால் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகளில் அறிந்தனர். குறிப்பாக கற்கள், ஓடுகள் உள்ளிட்ட பீங்கான் பொருட்களை தயாரிக்கும் பணியிலும் இதை மூலப்பொருளாக எடுத்து கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டது. அதன் அடிப்படையில் வர்த்தக ரீதியாக தயார் செய்யப்பட்டு, பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையிலும் அவை கிடைக்க இருக்கின்றன.

வலுவான கற்கள்

இரும்பு கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களில், பாதிப்பை உண்டாக்கும் பொருட்கள் அகற்றப்பட்டு, செங்கற்கள் தயாரிப்பில் பயன்படுத்தும் முறையும் காணப்பட்டுள்ளது. அவற்றின் விகிதம் தர நிர்ணய விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவை விடவும் குறைவாக உள்ளன. மேலும், இரும்பு ஆலை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்கள் மற்றும் இதர ஓடு வகைகள் நல்ல வலுவுடன் இருப்பதால், பளு தாங்கும் சுவர்களுக்கும் இவ்வகை இரும்பு கற்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

Next Story