குளிர்காலத்திற்கு ஏற்ப சுவரின் வண்ணங்கள்


குளிர்காலத்திற்கு ஏற்ப சுவரின் வண்ணங்கள்
x
தினத்தந்தி 20 Jan 2018 10:30 AM IST (Updated: 20 Jan 2018 10:30 AM IST)
t-max-icont-min-icon

மழை அல்லது பனி ஆகிய காரணங்களால் சுற்றுச்சூழல் வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீடுளுக்குள் உட்புகுவதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சுவர்களின் வண்ணங்களை மாற்றியமைக்கலாம்.

 நெருப்பின் தன்மையை பிரதிபலிக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்கள் வீட்டுச் சுவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இவ்வகை நிறங்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பலான மன நிலையை போக்க உதவுவதாக அறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட வண்ணங்களில் இருக்கும் பொருட்களை வரவேற்பறை மற்றும் படிப்பறை ஆகியவற்றில் வைக்கலாம். குறிப்பாக, சோபாவில் போடப்படும் மெத்தைகள், தலையணை உறைகள், பெட்ஷீட் மற்றும் ஜன்னல் திரைகள் ஆகியவற்றை மேற்கண்ட நிறங்களில் அமைத்துக்கொள்ளலாம். மேற்கண்ட மாற்றங்கள் காரணமாக மனதிற்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக உள் அலங்கார வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1 More update

Next Story