கட்டிட அமைப்பில் பிரமிடு வடிவங்கள்


கட்டிட அமைப்பில் பிரமிடு வடிவங்கள்
x
தினத்தந்தி 27 Jan 2018 11:35 AM IST (Updated: 27 Jan 2018 11:35 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட அமைப்பியல் மற்றும் கோண அளவியல் ஆகியவற்றின் கூட்டுக்கலவையாக பிரமிடுகள் இருப்பதால் அவை, நன்மைகளை தருவதாக பலருக்கும் நம்பிக்கை இருந்து வருகிறது.

பிரமிடு என்ற கட்டுமான அமைப்பு பற்றி பலரும் அறிந்திருப்போம். உலக அளவிலான கவனம் பெற்ற அதன் வடிவமைப்பு இன்று வரை வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிட அமைப்புகளில் கையாளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளின் மேல்மாடிகளில் அமைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள் பிரமிடு வடிவத்தில் இருப்பதை காணலாம்.

புவி ஈர்ப்பு மையம்


பிரமிடு என்பது பட்டையான கூம்பு வடிவத்தில் அமைக்கப்படும் கட்டுமான முறை ஆகும். அதன் அடிப்பகுதி சரியான சதுர வடிவத்தில் இருக்கும். பிரமிடு வடிவிலான கட்டுமான அமைப்பின் பெரும்பகுதி நிறையானது, அதன் அடிப்பகுதியில் பரவலாக அமைந்திருக்கும். அதன் காரணமாக பிரமிடுகளின் புவி ஈர்ப்பு மையம் நிலப்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதன் முறையான வடிவமைப்பின் காரணமாக கிடைக்கும் பயன்கள் பற்றி அறிய எவ்விதமான கருவிகளும் இல்லை என்றாலும், பலன்கள் அனுபவ ரீதியாக உலக நாடுகளில் உணரப்பட்டுள்ளது. இன்றைய நகர்ப்புற நாகரிக கட்டமைப்புகளில் பிரமிடு அமைப்பு அல்லது அதன் சாயலை நாம் எளிதாக கவனிக்க முடியும்.

பலரது நம்பிக்கை

பொறியியல் வல்லுநர்களை வியக்க வைக்கும் பிரமிடுகளின் அடிப்பகுதி சதுரமாகவும், நான்கு சரிவான முக்கோண பகுதிகள் உச்சியில் ஒன்றாக கூம்பு வடிவத்திலும் இணைகின்றன. அதன் மூலம் சக்தியின் ஈர்ப்பு மண்டலம் கீழ்ப்பகுதியில் சமமாக பரவுகிறது. பிரமிடு வடிவ கட்டிட அமைப்புகளில் அமர்ந்து படிப்பது அல்லது உறங்குவது போன்ற விஷயங்கள் நல்ல பலன்களை தருவதாக பலரும் நம்புகிறார்கள். தங்களது வீடுகளில் அமைப்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.

மின் காந்த ஆற்றல்

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை அல்லது பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் வடிவமைப்பில் அமைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. கச்சிதமான சதுர வடிவ அடிப்பகுதியின் மேலாக உள்ள உச்சிப்பகுதி அந்த ஆற்றலை பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

Next Story