பழைய பெயிண்டை அகற்ற உதவும் ரசாயனம்
பெயிண்டை முற்றிலும் அகற்றுவதற்கு, கரைக்கும் தன்மை கொண்ட பொருளை பயன்படுத்த வேண்டும்.
கட்டிட அமைப்புகள் மற்றும் இதர உலோகப்பரப்புகள் ஆகியவற்றில் பூசப்பட்ட பெயிண்டு வகைகள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, ஆங்காங்கே உரிந்து வர ஆரம்பிக்கும். பொதுவாக, சுவர்களில் உள்ள பழைய பெயிண்டு வகைகளை முற்றிலும் அகற்றிவிட்டு, வேறு பெயிண்டை பூசுவது சற்று சிரமமான வேலையாக கருதப்படுகிறது.
திரவ வடிவ ரசாயனம்
மேற்கண்ட பணியை சுலபமாக செய்து முடிக்க கண்டறியப்பட்ட பொருள் ‘பெயிண்டு ஸ்ட்ரிப்பர்’ என்ற ரசாயனமாகும். இந்த பொருள் ஜெல் வடிவத்தில் அல்லது பெயிண்டு போன்ற திரவ வடிவத்தில் சந்தையில் கிடைக்கிறது. எல்லாவிதமான பரப்புகளிலும் பூசப்பட்டுள்ள பெயிண்டு வகைகளை எளிதாக அகற்ற இந்த ‘ஸ்ட்ரிப்பர்’ பயன்படுகிறது.
எளிதாக அகற்றலாம்
சுவர் அல்லது உலோக பரப்பின்மீது பூசப்பட்டுள்ள பெயிண்டை முற்றிலும் அகற்றுவதற்கு, கரைக்கும் தன்மை கொண்ட பொருளை பயன்படுத்த வேண்டும். அதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனமானது பெயிண்டு பரப்பின் மேற்புறத்தில் நீண்ட நேரம் பரவி இருக்கவேண்டும். அதன் மூலம் பெயிண்ட் படலத்தில் ஊடுருவி, உள்புறத்தில் துளைத்து செல்லவேண்டும். அதாவது, கரைக்கும் தன்மை கொண்ட திரவம் பெயிண்டின் மேற்புற படலத்தை துளைத்து கொண்டு அதன் அடிப்பரப்பிலிருந்து பிடிப்பை அகற்றும் வேலையை செய்யவேண்டும். அதன் காரணமாக, பெயிண்டு படிப்படியாக உறுதியை இழப்பதால், அதை எளிதாக அகற்றிவிட முடியும்.
கெட்டியாக மாற்றலாம்
இந்த கரைப்பான் திரவ வடிவத்தில் இருப்பதால் செங்குத்தான பரப்புகளில் பூச வேண்டிய சமயங்களில் எளிதாக வழிந்து கீழே வந்துவிடாமல் தடுக்க இந்த ஸ்ட்ரைப்பரை கெட்டியாக மாற்றும் ‘திக்னர்’ என்ற பொருளை கலந்து கொள்வது அவசியம் என்று கட்டுமான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Tags :
Next Story