கண்கவரும் அறைகளுக்கான உள் அலங்கார குறிப்புகள்


கண்கவரும் அறைகளுக்கான உள் அலங்கார குறிப்புகள்
x
தினத்தந்தி 7 April 2018 12:15 AM GMT (Updated: 6 April 2018 12:19 PM GMT)

இல்லங்களுக்கான உள் அலங்காரம் என்பது இன்றைய இன்டர்நெட் யுகத்தில் அவசியமாக மாறியிருக்கிறது

பொருட்கள் வைக்கப்படும் அலமாரிகள் முதல் தலை வாசலில் போடப்படும் மிதியடி வரையில் இன்டீரியர் எனப்படும் உள் அலங்கார முறைகளில் அடங்குகின்றன. 

ஆரம்ப கட்ட பணி

பொதுவாக, சமையலறை உள்ளிட்ட இதர அறைகளில் உள்ள அலமாரிகள், சுவர் அலமாரிகள் (Wall Shelf)மற்றும் பரண்கள் ஆகியவற்றை மரப்பலகைகளால் ‘கவர்’ செய்வது இன்டீரியருக்கான ஆரம்ப கட்ட வேலையாக உள்ளன. 

உரிமையாளர் விருப்பம்

‘பால்ஸ் சீலிங்’, பூ வேலைப்பாடுகள், சமையலறைக்கான அலங்காரம், படுக்கையறைகளில் செய்யப்படும் வசதிகள் போன்ற பணிகளை அழகாக செய்து தர ‘இன்டீரியர் டெக்கரேட்டர்கள்’ நிறைய இருக்கிறார்கள். வீட்டு உரிமையாளரது தனிப்பட்ட ‘ஐடியாக்களை’ கச்சிதமாக கவனித்து அவற்றை உள் அலங்காரமாகவும் மாற்றியமைக்கிரார்கள். 

‘இன்டீரியர் பட்ஜெட்’

வீடுகளுக்கான உள் கட்டமைப்புகள் அமைக்க இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் என்ன செலவு ஆகும்..? என்ற கேள்விக்கு உள் அலங்கார நிபுணர்கள் பதில் தந்துள்ளனர். விலைவாசிகள் சற்றே அதிகமாக இருக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் பல நிறுவனங்கள் வெவ்வேறு நிலைகளில் ‘இன்டீரியர் எஸ்டிமே‌ஷன்’ தருகிறார்கள். ‘லேபர் கான்ட்ராக்ட்’ முறையில் ஒரு வீட்டுக்கு எளிமையான பட்ஜெட்டிலும் செய்து தருவதற்கு தனிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். 

மொத்த கணக்கு

வீடு அல்லது அடுக்குமாடிகளின் ‘கார்பெட் ஏரியா’ அளவு ‘இன்டீரியர்’ செலவை நிர்ணயம் செய்வதாக குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘கார்பெட் ஏரியா’ அளவுடன் ரூ.1000 என்ற தொகையை பெருக்கி, வரக்கூடிய விடையானது, அந்த வீட்டின் இன்டீரியருக்கு ஆகக்கூடிய தோராயமான மொத்த செலவாக எடுத்துக்கொள்ளலாம். 

அதாவது, வீட்டின் மொத்த அளவு 1000 சதுர அடி என்றால் அதன் ‘கார்ப்பெட் ஏரியா’ சராசரியாக 850 சதுர அடியாக இருக்கலாம். 850 உடன் 1000 என்ற எண்ணை பெருக்கி வரும் விடையான 8,50,000 என்பது தோராயமான ‘இன்டீரியர் பட்ஜெட்: ஆக குறிப்பிடலாம். 

கூடுதலான அமைப்புகள், சவுகரியங்கள் மற்றும் உயர்தரமான மூலப்பொருட்கள் ஆகிய காரணங்களால் மேற்கண்ட தோராய பட்ஜெட்டில் வித்தியாசம் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

Next Story