ரியல் எஸ்டேட் சந்தை வர்த்தகச் சுழற்சி


ரியல்  எஸ்டேட்  சந்தை  வர்த்தகச்  சுழற்சி
x
தினத்தந்தி 18 May 2018 9:00 PM GMT (Updated: 18 May 2018 11:07 AM GMT)

பொதுவாக, ஒரு சில துறைகளில் வர்த்தகம் மற்றும் பொருளாதார முதலீடு சார்ந்த ஏற்ற, இறக்கங்களை குறிக்கும் சுழற்சி நிலை சில வருட காலகட்ட அளவுக்குள் உட்பட்டதாக இருக்கும் என்று நிபுணர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு சில துறைகளில் வர்த்தகம் மற்றும் பொருளாதார முதலீடு சார்ந்த ஏற்ற, இறக்கங்களை குறிக்கும் சுழற்சி நிலை சில வருட காலகட்ட அளவுக்குள் உட்பட்டதாக இருக்கும் என்று நிபுணர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஏற்ற, இறக்கங்களை குறிக்கும் சந்தையின் சுழற்சி நிலை (
Real Estate Market Cycle
) கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் என்ற நீண்ட கால அவகாசம் கொண்டதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரியல் எஸ்டேட் வர்த்தக சுழற்சி நிலை என்பது அதன் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இயல்பான ஒருங்கிணைப்பு
(Consolidation)
கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர். 

வீடு விற்பனை விகிதம்

மேற்கண்ட கணக்கீடுகளின் அடிப்படையில் தற்போதைய குடியிருப்புகளுக்கான சந்தை நிலவரப்படி சொந்த பயன்பாட்டுக்காக வீடு அல்லது மனைகள் வாங்குபவர்கள் (
End User
) எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, இந்திய அளவில் 2017–ம் ஆண்டில் குடியிருப்பு காரணங்களுக்காக தனி வீடு அல்லது அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள் 89 சதவிகிதமாகவும், முதலீட்டு அடிப்படையில் வாங்குபவர்கள் 11 சதவிகிதமாக இருப்பதாகவும் ரியல் எஸ்டேட் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முந்தைய காலகட்டங்களில் முதலீட்டு அடிப்படையில் 40 சதவிகிதம் பேர் வீடு அல்லது மனைகளை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நிலவரம்

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, சென்னையில் விற்காமல் உள்ள குடியிருப்புகளில் ஒரு படுக்கை அறை வீடுகள் 14 சதவிகிதமாகவும், இரண்டு படுக்கை அறை வீடுகள் 45 சதவிகிதமாகவும், மூன்று படுக்கை அறை வீடுகள் 36 சதவிகிதமாகவும் உள்ளதால், சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் ஓரளவு பரவாயில்லை என்ற நிலையில் உள்ளது.

வீட்டுக்கடன் வட்டி 

குறிப்பாக, வீட்டுக் கடன் வட்டி விகிதம் சுமார் 8.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்கு பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY) கீழ் சுமார் ரூ.2.60 லட்சம் வட்டி மானியம் தரப்படுகிறது. வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகைகளான, திரும்பச் செலுத்தும் அசலில் ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டியில் ரூ.2 லட்சம் ஆகிய காரணங்கள் பெரும்பாலானவர்களுக்கு வீடு வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சி பெறும்

மேலும், தனி நபர் வருமானம் படிப்படியாக அதிகரித்துள்ளது, தனி நபர்கள் வீடு வாங்கும் தகுதி மேம்படுவது, விற்காத வீடுகள் எண்ணிக்கை குறைந்து வருவது, நுகர்வோர் நம்பிக்கை அதிகரிப்பது போன்ற காரணங்களால் 2018–ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் சந்தை வளர்ச்சி பெறும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

வீடு–மனை வாங்கும் சூழல்

அடுத்து வரக்கூடிய 18 முதல் 24 மாத காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் வளர்ச்சி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், ஓரளவு விலை குறைவாக இருக்கும் இந்த சமயத்தில் தேவை உள்ளவர்கள் மனை அல்லது பிளாட் வாங்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Next Story