மகிழ்ச்சி கூட்டும் குழந்தைகள் அறைகள்


மகிழ்ச்சி கூட்டும் குழந்தைகள்  அறைகள்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:15 AM IST (Updated: 8 Jun 2018 5:01 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் ஓடி விலையாடும் வீட்டை மகிழ்ச்சி பெருகும் நந்தவனமாக மாற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக, சின்ன குழந்தைகள் அறையில் அழகியல் அமைப்பு என்பதை விடவும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். கண்ணாடி கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் என முழுக்க கண்ணாடியில் ஆன அறையை குழந்தைகளின் பயன்பாட்டுக்கு அமைத்துத் தருவது கூடாது. விளையாடும் சமயங்களில் அவர்கள் எதிர்பாராமல் அதை உடைத்து, ஆபத்தை ஏற்படுத்தலாம். மரத்தால் செய்த கதவுகள், கைக்கு எட்டாத உயரத்தில் ஜன்னல்கள் கொண்ட அறைகளே குழந்தைகளுக்கு ஏற்றவை.

அவர்களது அறை சுவர்களுக்கு பளிச்சென்ற வண்ணங்களில் ‘பெயிண்டு’ அடிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு புத்துணர்ச்சி தந்து, நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது என அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, குட்டி பசங்கள் சுவர்களில் ‘கிரேயான்கள்’ கொண்டு விதவிதமாக வரைந்து தள்ளுவார்கள். அவற்றை எளிதாக சுத்தம் செய்ய ‘லேடக்ஸ்’ வகை பெயிண்டுகள் பொருத்தமாக இருக்கும். மேலும், குழந்தைகள் பென்சிலால் கிறுக்கி வைத்திருந்தாலோ, அழுக்கு கைகளை சுவற்றில் பதித்திருந்தாலோ எளிதாக அவற்றை துணியால் துடைத்து விட இயலும்.

Next Story