தெரிந்து கொள்வோம்.. - தரைத்தள கார் நிறுத்தம்


தெரிந்து கொள்வோம்.. - தரைத்தள கார் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 July 2018 10:08 AM IST (Updated: 21 July 2018 10:08 AM IST)
t-max-icont-min-icon

தரைத்தள கார் நிறுத்தம் (Stilt Car Parking) என்பது முற்றிலும் அடைக்கப்படாமல் ஒரு கட்டமைப்பின் கீழ்த்தள பகுதியை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதாகும்.

பொதுவாக, G+3, G+4 என்று குறிப்பிடப்படும் கட்டிட வரையறைகளில் ‘G ’ என்பது தரைத்தளம் (Stilt) எனவும், அதற்கடுத்து உள்ள எண்கள் எத்தனை அடுக்குகள் கொண்ட கட்டிடம் என்பதையும் குறிப்பிடுவதாகும். அதாவது. தரைமட்ட அளவில் மொத்த கட்டிட அமைப்பையும் தாங்கி நிற்கக்கூடிய தூண்கள் இப்பகுதியில் அமைந்திருக்கும்.

இந்த அமைப்பிற்கு மேலே கட்டிடத்தின் அடுக்குகள் யாவும் கட்டப்பட்டிருக்கும். பொறியியல் வரையறைகளின்படி தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டருக்கும் மிகாத உயரத்தில் திறந்த நிலையில், கட்டிடத்தின் பரப்பளவுக்குள் அமைந்த தரைத்தளத்தை, இரு சக்கரம் மற்று நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துவது 'Stilt Car Parking' ஆகும். இந்த பகுதியை வாகன நிறுத்துமிடமாக மட்டுமே பயன்படுத்துவது முறை என்ற நிலையில் வர்த்தகம் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்காக இப்பகுதியை உபயோகப்படுத்துவது கூடாது. 

Next Story