புது வீட்டின் ‘ஒயரிங்’ பணிகள்


புது வீட்டின் ‘ஒயரிங்’ பணிகள்
x
தினத்தந்தி 21 July 2018 11:20 AM IST (Updated: 21 July 2018 11:20 AM IST)
t-max-icont-min-icon

சொந்தமாக கட்டிய புது வீட்டில் குடியேறிய பிறகு, பலருக்கும் ‘ஒயரிங்’ பணிகளில் இன்னும் வேறு மாற்றங்களை செய்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

‘ஒயரிங்’ பணிகளை பொறுத்தவரை வரைபட அளவிலும், பின்னர் பணிகள் நடக்கும்போது ஒரு முறையும் கவனித்து தேவையான வசதிகளை குறிப்பிட்டு செய்து கொள்வது முக்கியம்.

பணிகள் முடிந்து குடியேறிய பிறகு, பிளக் பாயிண்டுகள் அல்லது மின்விளக்கு பற்றாக்குறை பற்றி யோசிப்பது சரியான முறையல்ல. எந்த அறையில், யாருக்கு என்ன தேவை என்பதை முன்னரே முடிவு செய்து கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சமையல் அறைக்கான ஒயரிங் பணிகளில் இல்லத்தலைவியின் ஆலோசனை அவசியம் கேட்டறிய வேண்டும் என்ற கருத்து பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், எதிர்காலத்தில் ஏ.சி, வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை அமைப்பதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலையில், அதற்கு ஏற்ற வகைகளில் ஒயரிங் பணிகளை செய்து கொள்வதும் பல சிக்கல்களை தவிர்க்கும் என்று எலக்ட்ரீஷியன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியமாக, வீட்டின் மின் உபயோகப் பொருட்களுக்கு ஏற்ப கச்சிதமான அளவுகளில் ஒயர்களின் தரம் இருக்கவேண்டும். மின்விளக்கு மற்றும் மின்விசிறிகளுக்காக மேற்கூரையில் குழாய் பதித்தல், பிளக் போர்டுகள் எத்தனை என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் எலெக்ட்ரீஷியனிடம் குறித்துத் தருவது நல்லது. பொதுவாக, சுவர்களில் துளைகள் அல்லது காடிகள் எடுக்கும் பணிகளை செய்யும்போது ‘ஜம்பர்’ வைத்து அடித்து குழி எடுப்பதை விடவும், ‘எலட்ரிக் ஹாம்மர் ட்ரில்’ அல்லது ‘வீல் கட்டர்’ வைத்து குழி எடுப்பதுதான் சுவர்களுக்கு பாதுகாப்பானது. 

Next Story