சொந்த ஊரில் வீடுகட்ட பணிபுரியும் நகரத்தில் வங்கிக்கடன்


சொந்த ஊரில் வீடுகட்ட பணிபுரியும் நகரத்தில் வங்கிக்கடன்
x
தினத்தந்தி 21 July 2018 6:00 AM GMT (Updated: 21 July 2018 6:00 AM GMT)

பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஊரில் சொந்த வீடு கட்டுவதற்கு நகரங்களில் உள்ள வங்கிகளிலேயே விண்ணப்பம் செய்யலாம்.

சொந்த ஊரிருந்து பணி அல்லது வியாபாரம் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள், அவர்கள் ஊரில் சொந்த வீடு கட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட நகரங்களில் உள்ள வங்கிகளிலேயே விண்ணப்பம் செய்யலாம். வீடு கட்டுவதற்கான கடன் பெற சொந்த ஊரில் உள்ள வங்கிகளை மட்டுமே அணுகவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அவ்வாறு வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் அவர்கள் பணிபுரியும் அல்லது வியாபாரம் செய்யும் நகரத்தில் உள்ள வங்கியில் அவர்களது சகல சுய விவர குறிப்புகள் (KYC), வருமானம் பற்றிய தகவல்கள், பத்திரம், ஊரில் உள்ள வீட்டு மனைக்கான அங்கீகாரம், அதன் பட்டா, வில்லங்க சான்று உள்ளிட்ட விவரங்கை-ளை அளித்து விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்.

சம்பந்தப்பட்ட வங்கி அவற்றை பரிசீலனை செய்து, ஏற்புடையதாக இருப்பின், மனை அமைந்துள்ள ஊரில் அல்லது அதன் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் மூலம் மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ளும். அதன் அடிப்படையில் விண்ணப்பத்தின் பேரில் வீட்டுக்கடன் அளிப்பது பற்றிய முடிவு மேற்கொள்ளப்படுகிறது. 

Next Story