புதுமையான கண்ணாடி நார் இழை தரைத்தள அமைப்பு
தரைத்தளம் என்பது ஐந்தாவது சுவர் என்ற நிலையில் அனைத்து கட்டமைப்புகளுக்கும் பிரதான அம்சமாக உள்ளது. அவற்றின் அமைப்பில் செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக் மற்றும் போர்சிலின் என பல்வேறு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
இனி வரும் காலங்களில் தரைத்தள அமைப்பில் மேற்கண்ட பல்வேறு டைல்ஸ் வகைகளுடன் ‘பைபர் கிளாஸ்’ தரைத்தள பதிகற்கள் கிடைக்கவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கட்டுமான வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘வினைல் புளோரிங்’ அமைப்பில் ‘பைபர் கிளாஸ்’ முறையும் இணைக்கப்பட்டு தரைத்தள கட்டுமான பணிகள் செய்யப்படுகின்றன. அவை பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.
பட்ஜெட் குறைவு
‘பைபர் கிளாஸ்’ டைல்ஸ் உறுதித்தன்மைக்கு ‘பாலியெஸ்டர் ரெசின்’ உள்ளிட்ட பல்வேறு ‘ரெசின்’ வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு அளவுகள் கொண்டதாகவும், நிறைய வடிவங்களிலும் ‘பைபர் கிளாஸ்’ பதிகற்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக, தரைத்தள அமைப்பில் பயன்படும் மற்ற பதிகற்களை விடவும், இவ்வகை டைல்ஸ் வகைகளுக்கு சற்று குறைவான பட்ஜெட் என்ற அடிப்படையில், வருங்காலத்தில் அதற்கான தேவைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு இடங்கள்
‘டைல்ஸ்’ வகைகளுக்கான பட்ஜெட் என்ற அடிப்படையில் செலவு குறைவாக ஆவதால் வீடுகளிலும், வர்த்தகக் கட்டமைப்புகளிலும் இவ்வகை பதிகற்கள் பயன்பாடு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. மேலை நாடுகளில் உள்ள பெரிய அளவிலான அடுக்கு மாடிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், தீம் பார்க் போன்ற இடங்களில் நவீன தோற்றம் தரும்படி இவ்வகை பதிகற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லை
இந்தியா, சீனா உள்ளிட்ட பல ஆசியா நாடுகளிலும் தற்போது இதன் உற்பத்தி துவங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் அவற்றின் உபயோகம் அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. குறைவான பட்ஜெட் மற்றும் நீண்ட கால உழைப்பு ஆகிய காரணங்களால் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ‘பைபர் கிளாஸ்’ டைல்ஸ் பயன்பாட்டுக்கு வந்திருக் கின்றன.
மேலும், சுலபமாக பயன்படுத்த ஏற்றதாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத தன்மை மற்றும் குறைந்த பட்ஜெட் ஆகியவற்றால் ‘பைபர் கிளாஸ்’ டைல்ஸ் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் உள் கட்டமைப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இவ்வகை பதிகற்கள் பல்வேறு மேலை நாடுகளில் சுவர்கள் (Wall Tiles) மற்றும் மேற்கூரை (Ceiling Tiles) ஆகியவற்றின் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story