கான்கிரீட் அமைப்புகளை பாதுகாக்கும் ரசாயன கலவைகள்
கட்டுமான பணிகள் நடைபெறும்போதே நீர்க்கசிவு மற்றும் சுவர் விரிசல்கள் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் ரசாயன கலவைகள் பல்வேறு வகைகளில் உள்ளன.
கட்டுமான பணிகள் நடைபெறும்போதே நீர்க்கசிவு மற்றும் சுவர் விரிசல்கள் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் ரசாயன கலவைகள் பல்வேறு வகைகளில் உள்ளன. குறிப்பாக, தற்போது சந்தையில் கிடைக்கும் ரசாயன கலவைகள் கான்கிரீட் கட்டுமானங்களுக்குள் தண்ணீர் ஊடுருவுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
எளிதான பயன்பாடு
குறிப்பாக, கான்கிரீட் தயாரிக்கும் இடத்தில் மேற்கண்ட ரசாயன கலவையை எளிதாக பயன்படுத்தலாம். ஆலைகளில் தயாரித்து கொண்டு வரப்படும் ‘ரெடிமிக்ஸ் கான்கிரீட்’ வகையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆலைகளிலேயே அவர்களிடம் குறிப்பிட்டு சொல்லி கலந்து கொள்ள இயலும்.
கலக்கும் விகிதம்
மேற்கண்ட ரசாயன கலவை கான்கிரீட்டில் அடங்கியுள்ள பொருட்களின் எடையில் 100–க்கு 0.8 என்ற விகிதத்தில் இருந்தால் போதுமானது என்றும், இந்த வழிமுறை சிக்கனமாக இருப்பதோடு, நீர் கசிவுக்காக வேறு தொழிநுட்ப அணுகுமுறைகளை கையாள வேண்டியதில்லை என்றும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கட்டிடங்களுக்கும் பயன்படுத்தலாம்
முன்னரே கட்டி முடிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்புகளில் நீர்க்கசிவு இருந்தாலும் மேற்கண்ட ‘அட்மிக்ஸர்’ என்ற ரசாயன கலவையை நேரடியாக அவற்றின் மேற்புறத்தில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆய்வு மையத்தில் சோதனை
கான்கிரீட்டில் ஏற்படும் நீர்க்கசிவை மேற்கண்ட ‘அட்மிக்ஸர்கள்‘ எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பது பற்றி அமெரிக்க நாட்டின் அயோவா மாநில கட்டுமான ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் கான்கிரீட் விரிசல்களுக்குள் படிகங்கள் உருவாகி, பெரிதாக மாறி விரிசல்களை அடைத்து கொள்வது அறியப்பட்டது.
மேலும், கடல் பகுதிகளில் அமைக்கப்படும் கட்டுமானங்கள் பராமரிப்பிலும் இவ்வகை ‘அட்மிக்ஸர்கள்’ பயன்படுகின்றன. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களில் உள்ள இரும்பு கம்பிகளை கடல் நீர் அரித்து விடும் நிலையில், இந்த முறை சிறந்த பாதுகாப்பு தருவதாக அமைகிறது.
Related Tags :
Next Story