இளம் வயதினர் பெயரில் வீடு–மனை பதிவு

இளம்  வயதினர் பெயரில்  வீடு–மனை  பதிவு
x
தினத்தந்தி 27 July 2018 9:30 PM GMT (Updated: 27 July 2018 11:32 AM GMT)

குடும்ப ரீதியான நம்பிக்கைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடு சார்ந்த நடவடிக்கைகளில் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்காக (மைனர்) பாதுகாப்பாளர் ஒருவரை நியமிப்பது நடைமுறை.

குடும்ப ரீதியான நம்பிக்கைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடு சார்ந்த நடவடிக்கைகளில் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்காக (மைனர்) பாதுகாப்பாளர் ஒருவரை நியமிப்பது நடைமுறை. 

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களின் மேற்பார்வையில் முதலீடு அல்லது வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பல குடும் பங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. 

அதன் அடிப்படையில் 18 வயதுக்கும் குறைவாக உள்ள மைனர் ஆண் அல்லது பெண்கள் பெயரில், அவர்களுக்கான பாதுகாப்பாளர் ஒருவரை நியமித்து வீடு–மனைகள் போன்றவற்றை வாங்க இயலும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அப்படி வாங்கப்பட்ட சொத்துக்களின் மைனர் உரிமையாளரது 18 வயது வரையில் பாதுகாப்பாளரே பொறுப்பாகிறார். அதன் பின்னர் பாதுகாப்பாளருக்கான பொறுப்பு சட்டப்படி நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story