தெரிந்து கொள்வோம்.. – ‘பாராபெட்’ சுவர்
‘பாராபெட்’ சுவர் (Parapet Wall) என்பது ஒரு கட்டுமான அமைப்பின் மொத்த சுற்றளவுக்கும் அமைக்கப்படும் குறுகிய உயரம் கொண்ட பாதுகாப்பு தடுப்புச் சுவர் கட்டுமானம் ஆகும்.
‘பாராபெட்’ சுவர் (Parapet Wall) என்பது ஒரு கட்டுமான அமைப்பின் மொத்த சுற்றளவுக்கும் அமைக்கப்படும் குறுகிய உயரம் கொண்ட பாதுகாப்பு தடுப்புச் சுவர் கட்டுமானம் ஆகும். பொதுவாக, வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் மேல் தளத்தின் ஓரங்களிலும், பால்கனியின் விளிம்பில் ‘பாராபெட்’ அமைக்கப்படுகிறது. மேலும், மேற்கூரைகளில் தடுப்பு அமைப்பாகவும், கட்டிட மேல் தளங்களின் ஓரங்களில் பாதுகாப்பு சுவராகவும், பாலங்கள் அல்லது சாலைகளின் பக்கவாட்டில் தடுப்பு சுவராகவும் இந்த கட்டமைப்பு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அழகியல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கருத்தாக்கமாக ‘பாராபெட்’ சுவர் அமைப்பு பழங்காலம் முதலாக பல உலக நாடுகளில் உபயோகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, மேற்கூரையிலிருந்து சரிந்து வரக்கூடிய பொருட்கள் கீழே உள்ள மனிதர்கள் மீது விழுந்து விடாதவாறு பாதுகாப்பு அரணாகவும் செயல்பட்டன. மேலும், பால்கனி விளிம்புகளில் கட்டாய பாதுகாப்பு சுவராக அமைக்கப்படும் முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இன்றைய காலகட்ட ‘பாராபெட்’ கட்டமைப்புகள் தண்ணீர் குழாய்கள், மின்சார ஒயர்கள் போன்றவற்றை மேல் மாடிகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் பயன்படுகின்றன. வெறும் சுவராகவோ, ‘ஜாலி’ அமைப்புகளை இணைத்த வடிவத்திலோ, சிறிய வகை தூண்கள் கொண்ட அமைப்பாகவோ இதன் கட்டுமானம் அமையலாம். எங்கே, எப்படி அமைத்தாலும் பாதுகாப்புக்கான குறுகிய தடுப்பு சுவர் கட்டுமானமாக இவை உபயோகத்தில் இருந்து வருகின்றன.
Related Tags :
Next Story