அறைகளில் குளிர்ச்சி நிலவ எளிய வழிமுறைகள்
வீட்டில் உள்ள அறைகளின் ஜன்னல்களில் ‘பிளைண்டர்’ என்ற மறைப்புகள் பொருத்துவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அதற்காக நீளமான, அகலமான பிளைண்டர்கள் பயன்படுத்தப்படும்.
வீட்டில் உள்ள அறைகளின் ஜன்னல்களில் ‘பிளைண்டர்’ என்ற மறைப்புகள் பொருத்துவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அதற்காக நீளமான, அகலமான பிளைண்டர்கள் பயன்படுத்தப்படும். அவை பல வகைகளில் சந்தையில் கிடைக்கின்றன. துணி, மூங்கில், பிளாஸ்டிக் என வெவ்வேறு வகைகளில் அவற்றை அமைத்து விட்டு ஜன்னலை திறந்து வைத்தால், அறைக்குள் வெயில் வராது. அதே சமயம் பிளைண்டர்களில் இருக்கும் இடைவெளி வழியாக காற்றோட்டம் ஏற்படும். மேலும், வீட்டில் பயன்படுத்தும் பெட்ஷீட், குஷன் கவர், ஸ்கிரீன் துணிகள் ஆகியவற்றில் பருத்தி துணிகளை பயன்படுத்துவதால், வெயில் காரணமாக, ஏற்படும் வெப்பத்தை உள்வாங்கி, அறையை குளுகுளுவென்று வைத்துக்கொள்ளும்.
மேற்கண்ட துணி வகைகள் மெல்லியதாகவும், வெளிர் நிறங்களான வெள்ளை, ஆப் ஒயிட், கிரீம் போன்ற நிறங்களில் இருப்பது அவசியம். காரணம் வெயில் காலத்தில் அடர்ந்தியான நிறங்கள் வெப்பத்தை வீட்டுக்குள் பிரதிபலிப்பதால், அறைகள் சூடாக மாற வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் ‘லெதர்’ சோபாக்கள் பயன்படுத்தப்படுகிறது. அழகாக இருக்கும் அந்த சோபாக்களில் அதிக நேரம் அமரும் பட்சத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக, வீட்டில் உள்ள வயதானவர்கள் வெயில் காலத்தில் அவற்றில் அமரும்போது சவுகரியமாக இருக்க சோபாக்கள் மேல்புறத்தில் மெல்லிய பருத்தி துணிகளை விரிக்கலாம்.
Related Tags :
Next Story