சுவர் மேற்பூச்சு பணியில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்


சுவர்   மேற்பூச்சு   பணியில்  கடைப்பிடிக்க   வேண்டிய   விதிமுறைகள்
x
தினத்தந்தி 11 Aug 2018 7:49 AM GMT (Updated: 11 Aug 2018 7:49 AM GMT)

மனித உடலுக்கு தோல் எவ்வாறு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளதோ, அதுபோல கட்டிட சுவர்களுக்கான மேற்பூச்சு செயல்படுவதாக கட்டுமான நிபுணர்கள் ஒப்பீடு செய்துள்ளார்கள்.

னித உடலுக்கு தோல் எவ்வாறு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளதோ, அதுபோல கட்டிட சுவர்களுக்கான மேற்பூச்சு செயல்படுவதாக கட்டுமான நிபுணர்கள் ஒப்பீடு செய்துள்ளார்கள். மேலும், ‘பிளாஸ்டரிங்’ என்ற அந்த மேற்பூச்சு பணியை மேற்கொள்ளும்போது கட்டுமான பணியாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மனதில் கொள்ளவேண்டிய தொழில்நுட்ப குறிப்புகள் பற்றியும் அவர்கள் தெரிவித்தவற்றை இங்கே காணலாம்.

‘கியூரிங்’ பணிகள் 

குடியிருப்புகள் மற்றும் இதர கட்டுமானங்களில் செங்கல் அல்லது ‘பிளை ஆஷ்’ உள்ளிட்ட மற்ற கற்களை பயன்படுத்தி சுவர் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் 7 அல்லது 8 நாட்கள் கழித்தே ‘பிளாஸ்டரிங்’ என்ற மேற்பூச்சு பணியை தொடங்கவேண்டும். அதற்கும் முன்னதாக போதிய அளவு தண்ணீர் விட்டு சுவர்களுக்கான ‘கியூரிங்’ பணிகளை முடித்திருப்பது அவசியம். 

‘பட்டன் மார்க்’ முறை

சுவர்ப்பூச்சு பணிக்கு முன்னர், தூக்கு குண்டு (ஜீறீuனீதீ தீஷீதீ) பயன்படுத்தி மேற்கூரை முதல் தரைத்தளம் வரையில், மேலிருந்து கீழாக சுவர்ப்பூச்சு ஒரே சீராக அமைவதற்கு சுவரில் ‘பட்டன் மார்க்’ செய்து கொள்வது முக்கியம். அதாவது, சுவர்ப்பூச்சின் கனம் மேலிருந்து கீழாக ஒரே அளவாக அமைவதற்கு இந்த ‘பட்டன் மார்க்’ முறை அவசியமானது.

‘சிக்கன் மெஷ்’ பயன்பாடு

செங்கல் அல்லது இதர கற்கள் கொண்டு அமைந்த சுவர் பரப்புகளை தக்க சிமெண்டு–மணல் கலவை கொண்டு பூச்சு வேலை செய்து விடலாம். ஆனால், சுவர்ப்பகுதியில் தூண்கள் அல்லது கான்கிரீட் அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீது வெறுமனே சிமெண்டு–மணல் கலவை மட்டும் கொண்டு பூச்சு வேலைகளை செய்வது கூடாது. 

காரணம், செங்கல் அல்லது இதர சுவர் அமைப்புகள் மற்றும் கான்கிரீட் தூண்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள வெப்ப நிலை மாறுபாடுகள் கொண்டதாக இருக்கும். அதன் காரணமாக, சிமெண்டு கலவையில் உள்ள ஈரப்பதம் உலரும் தன்மையில் உண்டாகும் மாற்றத்தின் காரணமாக விரிசல்கள் ஏற்படலாம். இந்த சிக்கலை தவிர்க்க ‘சிக்கன் மெஷ்’ எனப்படும் கோழிவலை அமைப்பை அவற்றிற்கு இடையில் வைத்து சுவர்ப்பூச்சு பணிகளை செய்யவேண்டும். 

மேற்பூச்சின் கன அளவு

பொதுவாக, சுவர் பூச்சு அமைக்கப்படும் கனம் 12 எம்.எம் முதல் 16 எம்.எம் வரையில் இருப்பதுதான் சரியானது. இந்த அளவை விட அதிகமாக சுவர்பூச்சு அமைவதை கட்டுமான பொறியாளர்கள் தவிர்க்கவே சொல்கிறார்கள். 

குறிப்பாக, வீட்டின் வெளிப்புற சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆர்க்கிடெக்சுரல் வடிவங்களை கச்சிதமாக சிமெண்டு–மணல் கலவை மூலம் ‘பிளாஸ்டரிங்’ செய்து அழகாக தோன்றும்படி செய்யப்படும். அந்த நிலையில் மேலே குறிப்பிட்ட அளவை விட, மேற்பூச்சின் கனம் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது. அந்த நிலையிலும் மேற்பூச்சின் கனம் 18 எம்.எம் என்ற அளவுக்கு மேற்படாமல் இருப்பதே சுவர் அமைப்புக்கு எடுப்பான தோற்றம் தரும்.

மெல்லிய விரிசல்கள்

பல இடங்களில் மேற்பூச்சு பணிகளை செய்து விட்டு, சுவர்ப் பரப்பு வளவளப்பாக இருப்பதற்காக சிமெண்டை தூவி விட்டு காரைக்கரண்டி கொண்டு தேய்த்து விடுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் எவ்விதமான நன்மையும் ஏற்படாது என்பதுடன், சுவரில் மெல்லிய விரிசல்கள் ஏற்படவே அது வழி வகுக்கும் என்றும் கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Next Story