உங்கள் முகவரி

ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் கொண்ட மனை அமைப்பு + "||" + More than one With roads Land system

ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் கொண்ட மனை அமைப்பு

ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் கொண்ட மனை அமைப்பு
மனை அமைப்புகளில் இரண்டு அல்லது மூன்று திசைகள் சந்திக்கும் மூலை பகுதிகளில் அமைந்தவை ‘கார்னர் பிளாட்’ (Corner Plots) என்று குறிப்பிடப்படுகின்றன.
னை அமைப்புகளில் இரண்டு அல்லது மூன்று திசைகள் சந்திக்கும் மூலை பகுதிகளில் அமைந்தவை ‘கார்னர் பிளாட்’ (Corner Plots) என்று குறிப்பிடப்படுகின்றன. புதிய மனைப்பிரிவுகளில் இவ்வகை மனைகளே முதலில் விற்பனை ஆகின்றன என்பது கவனிக்கத்தக்கது. அந்த நிலையில் குறிப்பிட்ட மனை அல்லது வீட்டுக்கு எந்தெந்த திசைகளில் சாலைகள் அமைந்திருந்தால் வாஸ்து சாஸ்திர ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி நிபுணர்கள் தரும் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஒன்று மற்றும் இரண்டு சாலைகள்

ஒரே சாலை மட்டும் உள்ள அமைப்பு என்றால் அது கிழக்கு அல்லது வடக்கு ஆகிய திசைகளில் இருப்பதே சிறப்பானது. அவ்வாறு இல்லாத நிலையில் மேற்கு திசையில் சாலை கொண்ட மனை உகந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது. இரண்டு சாலைகள் என்ற நிலையில் அவை கிழக்கு-மேற்கு, கிழக்கு-வடக்கு மற்றும் கிழக்கு-தெற்கு அல்லது வடக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு ஆகிய அமைப்புகளில் இருப்பது நல்லது.

மூன்று பக்கம் சாலைகள்

ஒரு மனை அல்லது வீட்டுக்கு மூன்று பக்கமும் சாலை வசதி இருந்தால் அவற்றில் மேற்கூறிய இரண்டு சாலைகள் கொண்ட அமைப்பில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவது நல்லது. மூன்று சாலைகளையும் பயன்படுத்துவது தனி வீடுகளுக்கு உகந்தது அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விதியானது அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கு பொருந்தாது என்பது கவனிக்கத்தக்கது.

நான்கு பக்கம் சாலைகள்

நான்கு பக்கமும் சாலைகள் அமைந்துள்ள வீடுகளுக்கு மேலே குறிப்பிட்ட இரண்டு பக்க சாலைகள் கொண்ட அமைப்பை பயன்படுத்துவதுதான் நல்லது. நான்கு பக்கங்களிலும் சாலைகள் அமைந்திருப்பது தனிப்பட்ட வீடுகளுக்கு நன்மை தருவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை.

‘கார்னர் பிளாட்’ அமைப்பு

மேற்கண்ட அடிப்படையில், குறிப்பிட்ட வீட்டுமனை திட்டத்தில் அமைந்துள்ள, ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் கொண்ட மனைகள் முதலில் விற்பனை ஆவது வழக்கம். பெரும்பாலும், முதலீட்டு நோக்கில் மனை வாங்குபவர்கள் இவ்வகை ‘கார்னர் பிளாட்களை’ தேர்ந்தெடுத்து வாங்குவதாக சொல்லப்படுகிறது.

முதலீட்டுக்கு ஆதாயம்

குறிப்பிட்ட ஒரு லே-அவுட் அமைந்துள்ள பகுதியின் வளர்ச்சிக்கேற்ப ‘கார்னர் பிளாட்’ அமைப்புகள் முதலீட்டுக்கு ஆதாயம் தரும் என்று பலரும் நம்புகிறார்கள். அதாவது, கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு ‘கார்னர் பிளாட்’ மனைகள் முதல் தேர்வாக அமைகின்றன. மேலும், வீடுகள் என்றால் அதற்கு இரண்டு திசைகளில் நுழைவு வாயில் வைப்பதன் மூலம் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கும் என்பதை மனதில் கொண்டுதான் பலரும் அவற்றை தேர்ந் தெடுக்கிறார்கள்.