ஒரே அறை கொண்ட புதுமை குடியிருப்புகள்


ஒரே அறை கொண்ட புதுமை குடியிருப்புகள்
x
தினத்தந்தி 18 Aug 2018 10:58 AM IST (Updated: 18 Aug 2018 10:58 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, சிறிய அளவில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளும் புதுமையான ‘ஸ்டூடியோ அபார்ட்மெண்ட்’ என்ற அணுகுமுறை பல மேலை நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதாவது, இந்த முறையில் மொத்த வீடும் ஒரே அறை கொண்டதாக அமைக்கப்படும். 300 அல்லது 400 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் ‘ஹால்’, சமையலறை, படுக்கை ஆகிய உள் கட்டமைப்புகள் செய்யப்பட்டிருக்கும். கூடவே தனிப்பட்ட ‘அட்டாச்டு பாத்ரூம்’ வசதியும் உண்டு.

ஒரே அறையில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதால், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டை விடவும் பார்வைக்கு பெரியதாக தோற்றமளிக்கும்.

‘பேச்சிலர்ஸ் அபார்ட்மெண்ட்’, ‘எபிஸியன்சி அபார்ட்மெண்ட்’ மற்றும் ‘ஸ்டூடியோ பிளாட்’ என்றும் இவை அழைக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இவ்வகை அடுக்குமாடி அமைப்புகள் புறநகர் பகுதிகளில், கட்டுனர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு அல்லது மூன்று நபர்கள் கொண்ட சிறிய குடும்பங்களுக்கும் இவை பொருத்தமாக இருக்கும். 
1 More update

Next Story