மனை தேர்வில் கவனிக்க வேண்டியவை


மனை   தேர்வில்   கவனிக்க   வேண்டியவை
x
தினத்தந்தி 24 Aug 2018 9:00 PM GMT (Updated: 24 Aug 2018 12:32 PM GMT)

வீட்டு மனையை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை வி‌ஷயங்கள் பற்றி கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.

வீட்டு மனையை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை வி‌ஷயங்கள் பற்றி கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம். 

மனையின் சுற்று வட்டாரம், அமைந்துள்ள இடம் ஆகியவற்றை அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும். மனை அமைந்துள்ள இடமானது, சுற்று வட்டார நிலத்தை விடவும் தாழ்வாக இருக்கும் பட்சத்தில் மழைக்காலங்களில், நீர் தேங்குவதால் பிரச்சினைகள் ஏற்படலாம். அந்த நிலையில், நில மட்டத்தை மண் கொண்டு நிரப்பி, சுற்றுப்புற நிலப்பரப்புக்கு சமமாக உயர்த்த கூடுதல் செலவு ஆகலாம். 

மனை சமமாக இருந்தாலும், அங்கே அஸ்திவார பணிகளை செய்ய மண்ணின் தன்மையானது 4 அல்லது 5 அடி ஆழத்துக்குள் உறுதியாக இருப்பதை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 25 வருடங்களுக்கு முன்னர் மண்ணின் தன்மை காரணமாக கட்டிட பணிகளை செய்ய உதவாது என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட இப்போது, நகர வளர்ச்சியின் அடிப்படையிலும், கடைக்கால் தொழில்நுட்பத்தில் உள்ள நவீன அணுகுமுறைகள் காரணமாகவும் பல அடுக்கு மாடிகள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, மண்ணின் தன்மை போதிய அளவு வலுவாக இல்லாத மனைகளில் ‘ரீம்டு பைல் பவுண்டே‌ஷன்’, ‘ராப்ட்டு அமைப்பு’ போன்ற நவீன முறையிலான அஸ்திவார தொழில் நுட்பங்களை அமைக்க வேண்டியதாக சாதாரண அஸ்திவார அமைப்பை விடவும் சற்று கூடுதலான செலவு பிடிக்கலாம்.

Next Story