ஆவணங்களில் சில வகைகள்


ஆவணங்களில் சில வகைகள்
x
தினத்தந்தி 13 Oct 2018 1:55 PM IST (Updated: 13 Oct 2018 1:55 PM IST)
t-max-icont-min-icon

வீடு - மனை உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்கள் பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம்.

தான பத்திரம்

ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை பிறருக்கு பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எவ்விதமான பயனையும் எதிர்பார்க்காமல் தானமாக எழுதி கொடுக்கும் ஆவணம் தானப்பத்திரம் எனப்படும்.

பாக பிரிவினை பத்திரம்

ஒருவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகளுக்கு சரிசமமாக பிரித்து தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களது பெயருக்கு ஆவணமாக கிரயம் செய்து கொடுப்பதை பாகப் பிரிவினை கிரய பத்திரம் என்று குறிப்பிடுவார்கள்.

செட்டில்மென்டு பத்திரம்

தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது எண்ணப்படி பிரித்து எழுதி வைக்கப்படும் ஆவணம் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.

உயில் பத்திரம்

ஒருவருக்கு சொந்தமான வீடு, மனை உள்ளிட்ட இதர சொத்துக்களை அவரது காலத்துக்கு பிறகு யார்யாருக்கு என்னென்ன அளவுகளில் உரிமை என்ற விவரங்களை உயில் மூலம் எழுதி வைப்பது உயில் பத்திரம் எனப்படுகிறது.

கிரய பத்திரம்

தன்னுடைய சொத்துக்களை இன்னொருவர் பெயருக்கு பணத்திற்காகவே அல்லது மற்றொரு பிரதி பலனுக்காகவோ ஆவணம் மூலம் உரிமை மாற்றம் செய்து கொடுப்பது கிரய பத்திரம் ஆகும். 

Next Story