தெரிந்து கொள்வோம் - ‘அபார்ட்மெண்ட்’
அடுக்குமாடி என்று சொல்லப்படும் ‘அபார்ட்மெண்டு’ (Apartment) அமெரிக்க நாட்டு சொல் வழக்கு ஆகும். இங்கிலாந்து நாட்டு சொல் வழக்கில் அது ‘பிளாட்’ (Flat) என்று குறிப்பிடப்படுகிறது.
பல வீடுகள் அடங்கிய அடுக்குமாடி தொகுப்பு ‘பிளாக்’ (Block) என்று சொல்லப்படுவதுடன் அவை தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கலாம்.
தனித்தனியாக விற்கப்படும் வீடுகளின் தொகுதிகள் பல உரிமையாளர்களை கொண்டிருப்பதால் கூட்டாக நிர்வாகம் செய்யப்படுகிறது. அத்தகைய வீட்டுத்தொகுதிகள் கூட்டுரிமை சொத்துக்கள் (Condominiums) எனப்படும்.
குறிப்பிட்ட ஒரு கட்டுனரால் அமைக்கப்பட்ட நான்கு அடுக்குகளுக்குள் அமைந்த மாடி வீடுகள் ‘பில்டர் பிளாட்ஸ்’ என்று சொல்லப்படும். அதன் ஒவ்வொரு தளமும் தனிப்பட்ட பிளாட்டுகளாக கருதப்படும்.
ஒவ்வொரு தளத்திலும் பல குடியிருப்புகள் கொண்ட நான்கு அடுக்குகளுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டிடமும் அதற்குள் சம்பந்தப்பட்ட கட்டுனர் அலுவலகமும் அமைந்திருந்தால் அது ‘மல்டி ஸ்டோரி அபார்ட்மெண்ட்’ அதாவது பல அடுக்குமாடி கட்டிடம் என்று குறிப்பிடப்படும்.

Related Tags :
Next Story